மார்ட்டின் லுாதர் ஒரு துறவி. சிறந்த சீர்திருத்தவாதியும் கூட. இவரின் செயல்பாடு மக்களை சிந்திக்க வைத்தன. இதனால் கோபம் அடைந்த குருமார்களும் அரசியல்வாதிகளும் இவரை கொலை செய்யும்படி வீரர்களுக்கு கட்டளையிட்டனர்.
இதனால் தலைமறைவாக வாழ ஆரம்பித்தார் மார்ட்டின். அவருக்கு ஒரே ஆறுதல் ஆண்டவர் மட்டுமே. ஒருநாள் அவரின் இருப்பிடத்தை வீரர்கள் கண்டுபிடித்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. ஏனெனில் யாருமே இல்லாத காட்டில் மார்ட்டின் லுாதர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருப்பது தெரிந்தது. அருகில் சென்ற வீரர்கள் அது பற்றி கேட்ட போது, 'எனக்கு ஆண்டவர் ஒருவரே மெய்யானவர். அவரே என்னை இங்கிருந்து வழிநடத்துகிறார்' என்றார். அவரது தெய்வீக நிலையை அறிந்த வீரர்கள் கைது செய்யாமல் திரும்பினர்.
நீங்கள் எந்தளவு நம்பிக்கை கொள்கிறீர்களோ அந்தளவுக்கு விசுவாசிக்கப்படுவீர்கள்.