நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆற்றங்கரையின் அருகருகே இருந்த இரண்டு மரங்கள் ஒன்றில் தன் குஞ்சுகளுடன் குருவி கூடு கட்ட அனுமதி கேட்டது. அதற்கு முடியாது என சொன்னது அந்த மரம். மற்றொரு மரத்திடம் அனுமதி கேட்டு கூடு கட்டியது குருவி.
சில நாள்களுக்கு பின்னர் பெய்த மழையில் ஆற்று வெள்ளத்தில் அந்த மரம் அடித்துச் செல்லப்பட்டது. அதை பார்த்த குருவி, எனக்கு இடம் தராததால் உனக்கு இது தேவை தான் என ஏளனம் செய்தது குருவி. அதற்கு அந்த மரம் வலுவிழந்து விட்டேன். எப்படியும் மழைக்கு நான் தாங்க மாட்டேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் இடம் இல்லை என்றேன். என்னை மன்னித்து விடு என்றது மரம். உதவி கேட்டு யாரும் செய்ய வில்லை என்றால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள். அவரவர் சூழல் அவருக்கே தெரியும்

