நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தின்பண்டங்களுக்கு ஆசைப்பட்ட குரங்கு ஒன்று தினமும் ஒரு பலகாரக்கடையில் இருந்து பணியாரத்தை எடுத்துச் சென்று விடும். இதனால் அவருடைய வியாபாரம் பாதித்தது. இதற்கு ஒரு முடிவு செய்ய நினைத்தார் அந்தக்கடைக்காரர். மறுநாள் தீக்கங்குகளை அவ்விடத்தில் பரப்பி வைத்தார். அங்கு வந்த குரங்கு தின்பண்டம் என நினைத்து அதில் கை வைத்தது. பிறகு என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
திருட்டு என்பது பாவம். அதில் ஈடுபட்டால் அதற்கான தண்டனையை அடைவீர் என்கிறது பைபிள்.

