ADDED : ஆக 11, 2023 02:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கனம் என்ற பெயரில் சிலர் சிறுமையாக நடந்து கொள்வர் எப்படியெனில் செருப்புத்தைப்பவரிடம் ஐந்து ரூபாய்க்காக பேரம் பேசிக்கொண்டு இருப்பர். ஆனால் ஓட்டல்களில் பெருமைக்காக ஐம்பது நுாறு என அன்பளிப்பு கொடுப்பர்.
பெண்கள், தெருவில் வியாபாரம் செய்யும் பெண்களிடம் கீரை கட்டினை ஐந்து ரூபாய் குறைத்து வாங்கி தம்பட்டம் அடித்துக் கொள்வர். இவர்களில் பலரும் ஆஸ்பத்திரிக்கு ஆயிரக்கணக்காக பணத்தை செலவிடுவர். இதில் இவர்கள் சிக்கனம், தாராளகுணம் எது என தெரியாமல் வாழ்கிறார்கள்.
உழைப்பவரை மதியுங்கள்.

