ADDED : ஜூலை 23, 2023 03:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிஞர் லியோ டால்ஸ்டாய் இரக்க குணம் கொண்டவர். இவரது மகள் பக்கத்து வீட்டு சிறுவனுடன் விளையாடும் போது அவன் அடிக்கவே அழுதபடி வீட்டிற்கு வந்தாள். அப்பாவிடம் அவனை அடிக்க வேண்டும் என்றாள். மகளை சமாதானம் செய்ததோடு ஒரு டம்ளர் பாலை சிறுவனிடம் கொடுக்கவும் சொன்னார்.அப்பா சொன்னதற்காக அவளும் அரைமனதுடன் செய்தாள். தன்மீது அன்பு காட்டியதை கண்டு வியந்தான் சிறுவன். அதன் பின் அவன் சண்டையிடவே இல்லை. பிறர் செய்த தீமைகளை மன்னிப்போம். மறப்போம்.

