ADDED : ஆக 25, 2023 10:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியவர் ஒருவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் அவரிடம் ரூ 10 லட்சத்திற்கான பில்லை கொடுத்தனர். அப்பில்லை பார்த்ததும் முதியவர் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். சமாதானம் செய்த மருத்துவர் ஏன் அழுகிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு சில நாட்கள் மட்டுமே என்னை பாதுகாத்த நீங்கள் 10 லட்சம் கேட்கிறீர்கள். ஆனால் இத்தனைக் காலம் என்னைக்காத்த ஆண்டவருக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லையே என நினைத்தேன். கண்ணீர் வந்தது என்றார் முதியவர்.

