நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வறுமையின் காரணமாக சாலையோர மரத்தடியில் பிச்சையெடுத்து கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் கரிப்பிடித்த ஓடு ஒன்று இருந்தது. அவ்வழியாக வந்த ஒருவர் அவரிடம் இருந்த ஓட்டினை வாங்கி பார்த்தார். இதை எவ்வளவு காலமாக வைத்துள்ளீர் எனக்கேட்டார். எனக்கு யாரோ ஒருவர் கொடுத்தது. அதை வைத்து தான் பிச்சை எடுக்கிறேன் என்றார் அவர். தன்னுடைய நகங்களால் அதிலுள்ள கரியை சுரண்ட அது பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது. அது தங்கத்தால் ஆன ஓடு என்பது அப்போது தான் அவருக்கு தெரிய வந்தது. இப்படித்தான் மனிதர்கள் தனக்குள் இருக்கும் விலைமதிப்பற்ற ஆண்டவரை உணராமல் வாழ்கின்றனர்.

