நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதர்களுக்கு வேண்டாத குணம் பொறாமை. இது மனிதரின் உயிரை பறித்து விடும். ஜான் என்பவர் பானை செய்பவர், ஜோசப் என்பவர் துணி துவைப்பவர். இருவரும் நண்பர்கள். ஒரு நாள் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. அன்றிலிருந்து எப்படியாவது மன்னரிடம் ஜோசப்பை மாட்டி விட வேண்டும் என ஜான் நினைத்தான். அதன்படி தந்திரமாக அரண்மனை யானைகள் கறுப்பாக உள்ளன. ஜோசப்பிடம் சொன்னால் வெள்ளையாக்கி தருவார் என மன்னனிடம் சொன்னான். அவரும் அதன்படியே மன்னரும் கட்டளையிட்டார். இது ஜானின் வேலை தான் என தெரிந்து கொண்டு, 'யானையை வெள்ளையாக்குவது எளிது. அவற்றை வைக்க உறுதியான பெரிய பானை வேண்டும்' என மன்னரிடம் சொன்னான். கட்டளை பறந்தது. எவ்வளவு பெரிய பானை செய்தும் பயனளிக்கவில்லை. பிறகு என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். பொறாமை என்னும் தீயகுணம் மனிதனை கொன்று விடும்.

