sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : டிச 19, 2024 02:55 PM

Google News

ADDED : டிச 19, 2024 02:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மு.பூர்ணிமா, வீரபாண்டி, தேனி: சொந்த வீடு அமைய...

செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன். அவருக்கு செவ்வாயன்று காலை 7:00 மணிக்குள் அர்ச்சனை செய்யுங்கள்.

யூ.யாழினி, மயிலாப்பூர், சென்னை: பாவத்தில் இருந்து விடுபட என்ன வழி?

ஒருவரை ஏமாற்றி இருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்பதோடு, உதவியும் செய்யுங்கள்.

யா.தேவகி, தேவனஹள்ளி, பெங்களூரு: நலமாக வாழ யாரை வழிபடலாம்?

நமசிவாய என சொல்லியபடி திருநீறு பூசுங்கள். பிறகு 'மந்திரமாவது நீறு' பதிகத்தை பாடுங்கள்.

பா.சரவணன், குறிஞ்சிப்பாடி, கடலுார்: சுமங்கலியாக வாழ...

கும்பகோணம் திருமங்கலக்குடி மங்களாம்பிகையை தரிசியுங்கள்.

அ.சியாமளா, வால்பாறை, கோயம்புத்துார்: கருடனை தரிசித்தால் எதிரி தொல்லை தீருமா?

முதலையிடம் சிக்கிய யானையைக் காக்க கருட வாகனத்தில் வந்தார் பெருமாள். அவர் உங்களையும் காப்பாற்றுவார்.

து.விமலாவினோத், திருவிதாங்கோடு, கன்னியாகுமரி: பிறவி ஏற்படாமல் தடுக்க வழி உண்டா...

ஆசைகளை படிப்படியாக குறைத்து மனம் விடுபட்டால் மறுபிறவி தடுக்கப்படும்.

ரா.நீலகண்டன், நாரணம்மாள்புரம், திருநெல்வேலி: பிருகு முனிவர் யார்?

பிரம்மாவின் மானச புத்திரர் இவர். தட்சனின் மகளான கியாதியை மணந்து மகாலட்சுமியை மகளாகப் பெற்றார். ஜோதிட சாஸ்திரத்தின் முதல் ஆசிரியரான இவருக்கு சுக்கிரன் என்ற மகனும் உண்டு.

மு.இளமாறன், இளையான்குடி, சிவகங்கை: விருப்பம் நிறைவேற மகான்களை எப்போது வழிபடலாம்?

வியாழன், பவுர்ணமியன்று விரதம் இருந்து வழிபடுங்கள்.

ரா.தனுஷ், கீர்த்திநகர், டில்லி: காயத்ரி மந்திரத்தை இரவில் ஜபிக்கலாமா...

சூரியன் மறைந்த பிறகு காயத்ரி மந்திரம் ஜபிக்கக் கூடாது. மற்ற மந்திரங்களை இரவில் ஜபிக்கலாம்.






      Dinamalar