sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜன 01, 2025 01:01 PM

Google News

ADDED : ஜன 01, 2025 01:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கமலேஷ், தோரணஹள்ளி, மைசூரு: கந்தசஷ்டி கவசம் கேட்டால்...

கவசம் என்றால் காப்பாற்றுவது. தினமும் இதைக் கேட்டால் முன்வினை தீரும். துன்பம் போகும்.

ம.மதன், கீழப்பாவூர், தென்காசி: உபதேசிக்கும் கிருஷ்ணரை வழிபட்டால்...

மிக நல்லது. அவரை பார்க்க பார்க்க மகிழ்ச்சி கிடைக்கும்.

பெ.ஜெயந்தி, தாமல், காஞ்சிபுரம்: ஆட்டுக்கிடா வாகனத்தை கோயிலுக்கு கொடுக்கலாமா?

கொடுக்கலாம். இதனால் உடல்நலம், ஆயுள் பெருகும்.

ஆர்.பரிமளா, வசந்த்குஞ்ச்,டில்லி: உம்மாச்சி என்றால் யார்?

சிவபெருமான். இவரது மற்றொரு பெயரான உமாமகேஸ்வரர் என்பதன் சுருக்கம் இது என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

எம்.அனிதா, கீழ்குந்தா, நீலகிரி: நமசிவாய, சிவாயநம - யார் ஜபிக்கலாம்?

நமசிவாய - எல்லோரும்;

சிவாயநம - தீட்சை பெற்றவர் ஜபிக்க வேண்டும்.

ரா.ராஜா, சிறுமலை, திண்டுக்கல்: மகிழ்ச்சியாக வாழ...

திருவாதிரையன்று விரதமிருந்து நடராஜரை வழிபட மகிழ்ச்சியாக வாழலாம்.

பா.மலர்விழி, திருவெண்ணெய்நல்லுார், விழுப்புரம்: துரோகத்தை...

மன்னியுங்கள், மறந்து விடுங்கள்.

கு.ராம்ஜி, ராமேஸ்வரம், ராமநாதபுரம்: பாவச் செயல்கள் எவை?

கொலை, கொள்ளை, மது அருந்துதல், சூதாட்டம், பெண்களிடம் முறை தவறி நடத்தல்.

வே.பரிமளம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி: எதிரி, துரோகியின் கொட்டம் அடங்க...

ஓம் அஷ்ட ஹஸ்தாய வித்மஹே;

அனுக்ரஹ ரூபாய தீமஹி;

தந்நோ பத்ரகாளி ப்ரசோதயாதே'.

என்னும் காளி காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்.






      Dinamalar