sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : பிப் 27, 2025 02:53 PM

Google News

ADDED : பிப் 27, 2025 02:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ரகு, உச்சிமேடு, கடலுார்: பசுவின் சாணத்தை வாசலில் தெளிப்பது ஏன்?

தெய்வீகம் நிறைந்த அதிகாலையில்(காலை 6:00 மணிக்கு முன்) வாசலைப் புனிதப்படுத்த தெளிக்கிறோம்.

மு.குமார், காசிதர்மம், தென்காசி: அமைதி இல்லை... என்ன செய்யலாம்?

காலையில் நீராடியதும் இஷ்ட தெய்வத்தை தியானித்தபடி 108 போற்றியை சொல்லுங்கள்.

பி.பகவதி, எழுமலை, மதுரை: மகனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. என்ன செய்ய?

படிப்பின் அவசியத்தை சொல்லுங்கள். புரியும் விதத்தில் பாடத்தை நீங்கள் சொல்லிக் கொடுங்கள்.

ஆ.சரவணன், கூனம்பட்டி, திருப்பூர்: என் தாயை முதியோர் இல்லத்தில் மனைவி சேர்க்கச் சொல்கிறாள். என்ன செய்வது?

பச்சை இலையும் ஒருநாள் பழுப்பாகும். மனைவியை சமாதானப்படுத்துங்கள்.

மா.தங்கம், வீரபாண்டி, தேனி: பரசுராமரின் கையில் கோடரி இருப்பது ஏன்?

அந்தணர்கள், முனிவர்களை இழிவுபடுத்திய மன்னர்களை அழிப்பதற்காக தவம் செய்து சிவனிடம் வரமாக பெற்றது இது. இதைக் 'கந்தபரசு' என்பர்.

அ.பவித்ரா, கிள்ளியூர், கன்னியாகுமரி: *பிரதோஷத்தில் தான் நந்தி அபிஷேகம் நடக்குமா?

இல்லை. தினமும் நடக்கும். பிரதோஷத்தில் செய்வது சிறப்பு.

து.பாஸ்கர், வண்டலுார், காஞ்சிபுரம்: *துன்பம் வருவதும் நன்மைக்குத் தான் என்கிறார்களே...

தீயிலிட்ட தங்கம் ஜொலிக்கும். அதுபோல துன்பத்தால் மனம் பக்குவம் ஆகும்.

தி.புஷ்பா, பசவன்குடி, பெங்களூரு: பிடிக்காத பாடத்தை அப்பா படிக்கச் சொல்கிறார். என்ன செய்ய?

உங்களுக்காகத் தான் சொல்கிறார். முடியாவிட்டால் பளிச்சென சொல்லி விடுங்கள்.

ம.வேணி, கல்யாண்புரி, டில்லி: *விரத நாளில் பசி அதிகமாகிறதே...

இது மனப் பிரச்னை. இளநீர் அல்லது மோர் குடிக்கலாம்.






      Dinamalar