
ஜூலை 19 ஆடி 3: பிரதோஷம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தேர். வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் திருக்கல்யாணம். திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகனம். திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை, ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
ஜூலை 20 ஆடி 4: பவித்ர சதுர்த்தசி. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்.
ஜூலை 21 ஆடி 5: பவுர்ணமி. சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம். வியாச பூஜை. சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசுக்காட்சி. அழகர்கோவில் கள்ளழகர், வடமதுரை சவுந்திரராஜப்பெருமாள் கோயில்களில் தேர். அகோபிலமடம் 22வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். பட்டினத்தார், ஆளவந்தார் திருநட்சத்திரம்.
ஜூலை 22 ஆடி 6: திருவோண விரதம். சாத்துார் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி. திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
ஜூலை 23 ஆடி 7: சுவாமிமலை முருகப்பெருமான் தங்க பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.
ஜூலை 24 ஆடி 8: சங்கடஹர சதுர்த்தி. திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம். விநாயகருக்கு விரதம் இருந்து மோதகம் படைத்து வழிபடுதல்.
ஜூலை 25 ஆடி 9: திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் விடையாற்று உற்ஸவம்.