sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 01, 2024 01:04 PM

Google News

ADDED : மார் 01, 2024 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.சஞ்சனா, மேலுார், மதுரை.

*சிறப்பான முகூர்த்தம் எது?

பிரதமை, அஷ்டமி, நவமி, பவுர்ணமி, அமாவாசையை தவிர, மற்ற திதிகளில் வரும் முகூர்த்தம் சிறப்பானவை.

எம்.ஆர்த்தி, சிங்காநல்லுார், கோயம்புத்துார்.

*குழந்தை இல்லாவிட்டால் தெய்வத்தை மானசீகமாக தத்து எடுக்கலாமா?

தத்து எடுப்பது தம்பதியரின் தனிப்பட்ட விஷயம். மன அமைதிக்கு வழிபாட்டில் ஈடுபடுவதே தீர்வு.

பி.ஸ்ரீநிதி, திருவட்டாறு, கன்னியாகுமரி.

*திருமணமான பெண்களின் கடமை என்ன?

தர்மநெறி தவறாமல் ஆண்களை வழிநடத்துவது இவர்களின் கடமை.

எம்.அவந்திகா, குறிஞ்சிப்பாடி, புதுச்சேரி.

*தேவகுரு(பிரகஸ்பதி)வும், அசுரகுரு(சுக்கிரன்)வும் ஒரே ராசியில் இருந்தால்……

இருவரும் இருக்கும் ராசி, லக்னத்தைப் பொறுத்து நன்மை, தீமை வரும்.

எல்.ரஞ்சனி, திருப்போரூர், செங்கல்பட்டு.

*ஜீவசமாதி கோயிலை இடித்து அதன் மீது சாலை அமைத்து விட்டனர். என்ன செய்யலாம் ?

இப்படியும் நடக்கிறதே... வேறிடத்தில் கோயில் கட்டி பூஜை நடத்துங்கள்.

கே.ஆனந்தன், உடன்குடி, துாத்துக்குடி.

*எங்கள் வீட்டில் குளவிகள் கூடு கட்டியுள்ளன. அதை கலைக்கலாமா?

கர்ப்பிணி வாழும் வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் கலைக்கக் கூடாது. மற்றபடி கலைத்தால் தவறில்லை.

கே.பவானி, சன்னபட்னா, பெங்களூரு.

*கடவுள் பாடல்களில் அவன், இவன் என ஒருமை இடம் பெறுகிறதே...

@அன்பின் மிகுதியால் ஒருமையில் பாடுவது மரபு. தகப்பன், பாட்டன், முப்பாட்டன் என நாம் சொல்வதில்லையா...

எம்.ராஜராஜன், திருநின்றவூர், திருவள்ளூர்.

*அலுவல் காரணமாக அமாவாசை, கார்த்திகை நாளில் முடிவெட்டினேன். செய்யலாமா...

அந்த நாளை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் கடன் ஏற்பட வாய்ப்புண்டு.

வி.ஜனனி, வடமதுரை, திண்டுக்கல்.

*விரத நாளில் நோயாளிகளுக்கு கட்டுப்பாடு உண்டா...

இல்லை. விரத நியமங்களை முடிந்தளவு பின்பற்றுங்கள். தலைகுளிப்பது, கோயிலுக்கு செல்வதில் மட்டும் விலக்கு உண்டு.

சி.கங்கா, பப்பன்கிலேவ், டில்லி.

*சிலர் எதை சொன்னாலும் 'ததாஸ்து' என்கிறார்களே...

அப்படியே ஆகட்டும்' என பொருள். அதாவது நல்ல விஷயத்தைக் கேட்கும் போது 'நல்லதே நடக்கட்டும்' என ஆசியளிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us