sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 07, 2024 10:52 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 10:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.வானதி, சிறுமலை, திண்டுக்கல்.

*சந்திராஷ்டமத்தன்று பிரச்னையைத் தவிர்க்க...

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துங்கள். அன்று மவுனமாக இருங்கள்.

ஆர்.திருமுருகன், பேரூர், கோயம்புத்துார்.

*அத்திமரச் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?

வழிபடலாம். இதை 'தாரு விக்ரகம்' என்பர்.

எல்.தனபால், கடையநல்லுார், தென்காசி.

*பிரம்மஹத்தி தோஷம் என்றால்...

சாதுக்கள்,அந்தணர்களுக்கு துன்பம் செய்வது பிரம்மஹத்தி தோஷம்.

வி.ரவிச்சந்திரன், திருவாடானை, ராமநாதபுரம்.

*திருமணத்தில் நலுங்கு வைப்பது ஏன்?

தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், விட்டுக் கொடுத்து வாழவும் நலுங்கு வைக்கப்படுகிறது.

எஸ்.பார்கவி, குளச்சல், கன்னியாகுமரி.

*மனிதனாகப் பிறப்பது அரிது என்றால் சிலர் பிறவாத வரம் கேட்கிறார்களே...

மனிதப்பிறவியின் அருமை தெரியாதவர்களுக்காக 'அரிது அரிது மானிடர் ஆதல் அரிது' என்றார் அவ்வையார். பக்தியைத் தவிர வேறு எதற்கும் ஆசைப்படாத அருளாளர்கள் பிறவாத வரத்தை விரும்புகின்றனர்.

சி.அம்பிகா, வில்லியனுார், புதுச்சேரி.

*நதி, மலைகளை புனிதமாக கருதுவது ஏன்?

இயற்கையின் அற்புதங்கள் நதி,மலைகள். ஆன்மிக சக்தி உள்ள இவற்றில் நீராடுவது, வலம் வருவது நம் நன்மைக்காகவே.

எம்.ராஜலட்சுமி, திரிவேணிபுரி, டில்லி.

*சுவாமி சிலைகளை பஞ்ச லோகத்தில் செய்வது ஏன்?

தெய்வ சக்தியை அதிகமாக ஈர்க்கும் தன்மை பஞ்ச லோகத்திற்கு உண்டு. இதை ஐம்பொன் என்றும் சொல்வர்.

ஆர்.புனிதா, திண்டிவனம், விழுப்புரம்.

*முகூர்த்தம் என்பதன் கால அளவு எவ்வளவு?

முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை. ஒரு நாழிகைக்கு 24 நிமிடம். அதன்படி ஒன்றரை மணி நேரம்(90 நிமிடம்)

எஸ்.கண்ணன், எழும்பூர், சென்னை.

*உப்பு, மிளகை காணிக்கை செலுத்துவது ஏன்?

கொப்பளம், தோல்நோய் தீர அம்மனுக்கு இதை காணிக்கை செலுத்துகிறோம்.

டி.கணேஷ், குஷால்நகர், மைசூரு.

*உயிரைப் பறிக்கும் எமனை 'எமதர்மன்' என்பது ஏன்?

சிவபெருமானுடைய கட்டளைப்படி அழித்தல் தொழிலைச் செய்பவர் எமன். இவர் தர்மநெறி தவறாதவர். இதனால் இவர் 'எமதர்மன்' எனப்படுகிறார்.






      Dinamalar
      Follow us