sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பகவத்கீதையும் திருக்குறளும் - 4

/

பகவத்கீதையும் திருக்குறளும் - 4

பகவத்கீதையும் திருக்குறளும் - 4

பகவத்கீதையும் திருக்குறளும் - 4


ADDED : ஜூன் 07, 2024 11:00 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 11:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயர்ந்த மனிதர்

பள்ளி சென்று வந்ததும், ராமசாமி தாத்தாவை பார்க்கப் போனான் கந்தன். மரத்தடியில் அவர் உட்கார்ந்திருந்தார். மகிழ்ச்சியுடன், 'தாத்தா... இன்னிக்கு வகுப்பில் எல்லோரும் என்னை பாராட்டினாங்க. . 'ரொம்ப பிடிச்ச உயர்ந்த மனிதர் யார்? எதனால் அவரை பிடிக்கும்?' என ஆசிரியர் என்னைக் கேட்டார். நான் சொன்னேன் 'விவேகானந்தர் தான். ஏன்னா அவர்தான் நாட்டையும், ஹிந்து மதத்தையும் உலகறியச் செய்தார்' என்றேன். உடனே அனைவரும் கைதட்டினர். 'சரி தாத்தா... பகவத்கீதை, திருக்குறள் இரண்டிலும் உயர்ந்த மனிதர் பற்றி என்ன சொல்லியிருக்கு' எனக் கேட்டான் கந்தன்.

''பகவத்கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் 15வது ஸ்லோகத்தில் கிருஷ்ணர் இதை பற்றி சொல்கிறார்

யம் ஹி ந வ்யத²யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப 4|

ஸமது ³:க²ஸுக²ம் தீ 4ரம் ஸோம்ருதத்வாய கல்பதே ||2-15||

மனிதர்களில் சிறந்தவன், சுக துக்கங்களை சமமாக ஏற்பவன் எதற்கும் கலங்கமாட்டான். தேவாமிர்தம் போன்ற சாகாநிலையை அடைய அவன் தகுதி கொண்டவன்.

இதை திருவள்ளுவரும் 627வது குறளில்

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்.

துன்பத்திற்கு இடமானது இந்த உடம்பு. இதை உணர்ந்தவர்கள் மேலானவர்கள். அவர்கள் துன்பத்தில் கலங்குவதில்லை.

'உங்க தாத்தா சமீபத்தில் இறந்தார் இல்லையா?' எனக் கேட்டார் ராமசாமி தாத்தா.

'ஆமா... அவர் இறந்து போய் ஒரு மாதமாச்சு' என்றான் கந்தன்.

'அன்றைக்கு நீ அழுதாய் தானே?

'ஆமா ரொம்ப சோகமா இருந்தேன்.

சரி இன்றைக்கு வகுப்பில் உன்னை பாராட்டினாங்களே... அப்போ உனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது' எனக் கேட்டார்.

ஆமா... ரொம்ப சந்தோஷமா இருந்தது'

' நீதான் அன்றைக்கு சோகமா இருந்தியே அப்புறம் இன்றைக்கு பாராட்டினதும் எப்படி சந்தோஷம் வந்தது' எனக் கேட்டார்.

'என்ன தாத்தா இப்படி கேட்கிறீங்க? பாராட்டும் போது சந்தோஷம் வரத்தானே செய்யும்' என்றான் கந்தன்.

இதே மாதிரி இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். அதுக்காக எப்பவுமே அதை நினைச்சு துக்கப்படவோ, சந்தோஷப்படவோ கூடாது.

இரண்டையும் மனம் எப்ப சமமாக நினைக்குதோ அப்போ நாம் உயர்ந்தவர்கள் ஆவோம். இனி விவேகானந்தர் மாதிரி நீயும் உயர்ந்த மனிதனாக விளங்குவாய்.

கந்தன் மகிழ்ச்சியுடன் விடைபெற்றான்.

-தொடரும்

எல்.ராதிகா

97894 50554






      Dinamalar
      Follow us