
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுபக்கிரகமான சந்திரன் தன் சாபம் தீர தஞ்சை மாவட்டம் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் வழிபட்டார். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோமா...
தட்சன் என்பவரின் 27 மகள்களும் சந்திரனின் அழகில் மயங்கி அவரைத் திருமணம் செய்தனர். அவர்களில் கார்த்திகை, ரோகிணி என்னும் இருவர் மீது மட்டும் சந்திரன் அன்பு செலுத்தினார். இதனால் வருத்தமடைந்த மற்ற 25 பெண்களும் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர்.
ஆத்திரப்பட்ட அவர், அழகு அழியட்டும் என மருமகனைச் சபித்தார். சாபம் தீர பூலோகம் வந்து திங்களூர் கைலாசநாதரை வழிபட்டார் சந்திரன். அழகு நிலையற்றது என அவருக்கு உணர்த்தும் விதமாக 15 நாள் வளரவும், 15 நாள் தேயவும் வேண்டும் என சாபத்தைக் குறைத்தார் கைலாசநாதர்.