sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

போதும் என்ற மனம் வேண்டும்! இறைவா அதை நீ தர வேண்டும்!!

/

போதும் என்ற மனம் வேண்டும்! இறைவா அதை நீ தர வேண்டும்!!

போதும் என்ற மனம் வேண்டும்! இறைவா அதை நீ தர வேண்டும்!!

போதும் என்ற மனம் வேண்டும்! இறைவா அதை நீ தர வேண்டும்!!


ADDED : மே 19, 2017 09:48 AM

Google News

ADDED : மே 19, 2017 09:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. பணக்காரனோ, ஏழையோ யாராக இருந்தாலும் போதும் என்ற மனதை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.

* முதுமைக்கு தேவையானதை இளமையிலும், மறுபிறவிக்கு தேவையானதை இப்பிறவியிலும் தேட வேண்டும்.

* கண்ணுக்குத் தெரிந்த உயிர்களுக்கு தொண்டு செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் தொண்டு செய்ய வேண்டும்.

* கல்வி, தானம், உடல்நலம் மூன்றிலும் தேர்ச்சி பெற இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் அவசியம்.

* நல்லவர்களின் உபதேசத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். சாதுக்களின் நல்ல வார்த்தைகள் காது வழியாக உண்ணும் உணவு போன்றது.

* இறைவன் நமக்குச் செய்யும் அத்தனை செயலும் அருள் தான். சில நேரத்தில் சோதனை குறுக்கிடும் போது, துன்பம் போல தோன்றலாம். ஆனால், அதுவும் கூட அறியாமை தான்.

* பலர் சேர்ந்து முறையிடும் போது அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பது போல, பலர் இணைந்து நடத்தும் கூட்டுப் பிரார்த்தனைக்கும் உடனடியாக பலன் கிடைக்கும்.

* மனிதனுக்கு பெருமை சேர்ப்பது பட்டமோ, பதவியோ, பணமோ, அழகோ, குலமோ அல்ல. அறிவு ஒன்றே ஒருவருடைய உயர்வுக்கு வழிவகுக்கும்.

* இனிய சொற்களைப் பேசும் நல்லவர்களுக்கு உலகில் துன்பம் உண்டாகாது. எம வாதனை இல்லாமல் கடவுளின் திருவடியை அடையும் பாக்கியம் கிடைக்கும்.

* திருமால் வாமனராக அவதரித்து இரண்டு அடியால் மூவுலகையும் அளந்தது போல, வள்ளுவர் திருக்குறளால் எல்லா உலகங்களையும் அளந்தார். அந்த குறள் காட்டும் நல்வழியில் நடப்பது நம் கடமை.

* விளையாட்டிற்கு கூட பொய் சொல்லாதவர்களின் புகழ் மூவுலகிலும் பரவும். வானுலக அரசனான இந்திரனால் கூட அவர்களை வெற்றி கொள்ள முடியாது.

* பொறுமை கடலை விட பெரியது. கடல் சூழ்ந்த இந்த உலகம் அழிந்தாலும், பொறுமை மிக்கவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

* தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் ஒளிச்சுடர் மேல் நோக்கி நிற்கும். செல்வம் இழந்த நிலையிலும் நல்லவர்கள் உள்ளத்தால் உயர்ந்து நிற்பர்.

* மற்றவரை மேலேற்றும் ஏணி, தான் மேலே செல்வதில்லை. ஆனால் நல்ல கருத்துகளை உலகிற்கு உபதேசிப்பவர்கள் தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்துபவராக இருக்க வேண்டும்.

வேண்டுகிறார் வாரியார்






      Dinamalar
      Follow us