/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
திருமணத்தடை நீங்க சுயம்வர புஷ்பாஞ்சலி
/
திருமணத்தடை நீங்க சுயம்வர புஷ்பாஞ்சலி
ADDED : மார் 03, 2017 01:56 PM

பெண்களுக்கு திருமணத்தடை நீங்கவும், நீண்ட ஆயுளுடன் வாழவும் 'புஷ்பாஞ்சலி' செய்யும் வழிபாடு, கொச்சி பலரிவட்டம் எம்.கே.கே.நாயர் சாலையில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில் நடக்கிறது.
''ஜல துர்கா'' என்றும், ''பலச்சுவட்டில் தேவி'' என்றும் இவள் அழைக்கப்படுகிறாள். இந்த தேவியின் சிலை பலா மரத்தடியில்
பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பலாப்பழத்தில் வெளியே முள் இருக்கும். கையில் குத்தும். உள்ளே பசை, பால் இருக்கும். அது கையில் ஒட்டும். இவ்வளவு இடைஞ்சலையும் கடந்து பழத்தை எடுத்து சாப்பிட்டால் அது தித்திக்கும். அதுபோல், பக்தர்களுக்கு எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டாலும், இந்த ராஜராஜேஸ்வரியை வழிபட்டு வந்தால் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது ஐதீகம்.
கேரளாவில் பரசுராமர் 108 அம்மன் கோவில்களில் இதுவும் ஒன்று. அவர் காலத்து கோவில் மிகவும் பழுதுபட்டது. 100 ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் எழுப்பிய கோவில் இப்போது வழிபாட்டில் உள்ளது. திருமணமாகாத பெண்கள், ராஜ ராஜேஸ்வரிக்கு வெள்ளை தும்பைப்பூ மாலை அணிவித்து, வேண்டுகிறார்கள். கணபதி, ஐயப்பன், விஷ்ணு, சிவன் மற்றும் நாக யக்ஷி சன்னிதிகளும் உள்ளன. கோவிலுக்கு வெளியே தீர்த்தக்குளம் இருக்கிறது. இங்கு நீண்ட ஆயுளுக்காக, 'மிருத்யுஞ்ஜய புஷ்பாஞ்சலி', திருமணத்தடை நீங்க 'சுயம்வர புஷ்பாஞ்சலி' ஆகிய வழிபாடுகளைச் செய்கின்றனர்.
நவராத்திரி காலத்தில் அம்பாள் யானையில் பவனி வருவாள்.
இருப்பிடம்: தெற்கு எர்ணாகுளம் ஜங்ஷனிலிருந்து 7 கி.மீ., தூரத்தில் கோவில் உள்ளது.
தொலைபேசி: 0484 - 234 9492

