ADDED : மார் 24, 2022 05:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்குனி உத்திரத்தன்று திருச்செந்துார் முருகன் கோயிலில் வள்ளி திருமணம் நடக்கும். இதற்காக அதிகாலையில் பள்ளியறையிலிருந்து முருகன் கருவறைக்கு சென்றதும் அபிஷேகம் நடக்கும். தீபாராதனை முடிந்து பூஞ்சப்பரத்தில் மேலக்கோயிலுக்கு எழுந்தருள்வார். மாலை நான்கு மணிக்கு தங்க மயில் வாகனத்தில் முருகன் மேலக்கோயில் முன்புறம் உள்ள பந்தல் மண்டபத்திற்கு வருவார். அப்போது வள்ளி மணக்கோலத்தில் வர மாலை மாற்றும் வைபவம் நிகழும். அப்போது தினை மாவிளக்கு ஏற்றுவர். வள்ளி கல்யாணத்தை தரிசித்து மாவிளக்கு ஏற்றினால் திருமணத்தடை நீங்கும்.

