நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழும் ஒரே ஜீவன் காக்கை. தான் மட்டும் உண்ணாமல் மற்ற காகங்களை அழைத்த பின்னரே உண்ணும் பண்பை கொண்டது.
காக்கைக்கு சோறிட்டால் முன்னோர் ஆசி கிடைக்கும். எமலோகத்தின் வாசலில் காவல்புரியும் காகத்தை 'எமதர்மனின் துாதுவன்' என அழைப்பர். பிதுர் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலமான கயாவில் 'காக சிலா' என்ற பாறை உள்ளது. அதில் தான் பிண்டம் வைத்து முன்னோர்களை வணங்குவர்.