
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனிமாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என பெயர். வியாசரின் வழிகாட்டுதலால் பாண்டவர்களில் ஒருவரான பீமன் தண்ணீர் குடிக்காமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது. 'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' எனப்பொருள். இந்நாளில் விளக்கேற்றி பெருமாளுக்கு துளசிமாலை சாத்துங்கள். இதை 'பீம ஏகாதசி' என்பர். இதன் மூலம் பாண்டவர்கள் இழந்த நாட்டை பெற்றனர். இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் கிடைக்க இந்நாளில் விரதம் இருங்கள்.