ADDED : டிச 09, 2016 09:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை வகைகளில் ஒன்றான மோதகம் முக்கிய நைவேத்யம். அதுபோல, கார்த்திகை திருவிழாவில் விநாயகர், முருகன், சிவனுக்குப் படைக்க வேண்டியது 'பிடி கொழுக்கட்டை'.
பச்சரிசி மாவுடன் எள், பாசிப்பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தைப் பாகாக காய்ச்சி மாவுடன் கலந்து ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். இந்த மாவை உள்ளங்கையில் சிறிது எடுத்து, ஒரு பிடி பிடித்தால் கைவிரல்கள் மாவில் பதியும். இந்த பிடி கொழுக்கட்டையை இட்லி சட்டியில் வேக வைக்க வேண்டும். உடலுக்கும் நல்லது. குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

