ADDED : ஜூன் 02, 2017 01:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரையில் குழந்தைகள் உருண்டு விளையாண்டால், 'ஐயோ! உடலெல்லாம் தூசாகும், எழுந்திரு,” என்று கண்டிப்போம். ஆனால் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் முன் கொடி மரம் முன் விழுந்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது நமது உடலில் எவ்வளவு தூசி படிகின்றதோ, அவ்வளவு வருட காலம் நாம் கைலாயத்தில் சிவ பார்வதியோடு வாழும் பாக்கியம் என்கிறது வேதம்.

