ADDED : அக் 07, 2016 09:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமியன்று வழிபடுவதோடு, அதன் இலைகளையும் பறிப்பர். வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். இளைஞர்கள் இந்நாளில் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசியைப் பெறுகின்றனர். பெரியவர்களும் ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் அந்த இலைகளைக் கொடுத்து 'இதை தங்கமாக நினைத்து பெற்றுக்கொள்ளுங்கள்' என சொல்லி ஆசீர்வதிப்பர். மகாராஷ்டிரா மாநிலக் கோவில்களில் வன்னிமரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவர்.

