ADDED : ஜூன் 02, 2017 01:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இசை, நடனம் பயிலும் மாணவர்கள், கலைஞர்கள் தொழிலில் சிறக்கவும், புகழ் பெறவும் ஆனி உத்திர நட்சத்திரத்தன்று( (ஜூன் 30) நடராஜரை வழிபட வேண்டும். இந்த நாளில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அதிகாலை 4:00 மணிக்கு ஆனி உத்திர அபிஷேகம் நடக்கும். மதியம் 1:00 மணிக்கு சிவகாமி அம்மனுடன் நடராஜர், ஆனந்த நடனக் கோலத்தில் காட்சியளிப்பார். சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பஞ்ச சபைத் தலங்களில் 'ஆனி உத்திர வழிபாடு' சிறப்பாக நடக்கும்.

