ADDED : டிச 09, 2016 09:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லா பண்டிகைகளின் போதும், தெய்வத்தின் முன் விளக்கேற்றுகிறோம். ஆனால் விளக்கிற்கு முக்கியத்துவம் தராமல், அந்த பண்டிகைக்குரிய தெய்வத்துக்கே முக்கியத்துவம் தருவோம். உதாரணமாக, தைப்பூசம் என்றால் முருகன் முன் விளக்கேற்றினாலும் முருகனுக்கே முக்கியத்துவம் தருவோம். ஆனால், திருக்கார்த்திகையில் விளக்கையே தெய்வமாகப் போற்றுகிறோம். ஒளி இல்லாவிட்டால் வீடு இருண்டு விடும். அதுபோல மனம் என்னும் வீட்டில் ஒளி இல்லாவிட்டால் உலகத்தில் அநியாயங்களே மிகுதியாக நடக்கும். எனவே மனதில் நல்ல எண்ணங்கள் என்னும் தீபத்தை ஏற்றி, அமைதியான வாழ்வுக்கு பிரார்த்திக்க வேண்டும்.

