ADDED : அக் 27, 2016 02:58 PM

செல்வ வளத்தை அருளும் லட்சுமி வழிபாட்டுக்குரிய நாள் தீபாவளி. லட்சுமி என்பதற்கு, 'செல்வம், அழகு, கருணை, இன்பம், தானியம் என பல பொருள் உண்டு. 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என்று பெரியவர்கள் சுபநாட்களில் வாழ்த்துவது வழக்கம். லட்சுமியின் அருள் இருந்தால் மட்டுமே அந்தப் பெருவாழ்வு' வளம் மிக்கதாக அமையும். தான் இழந்த செல்வத்தை மீட்க விரும்பிய தேவேந்திரன், லட்சுமிபூஜையை முதன் முதலில் நடத்தினான்.
இதற்காக, லட்சுமி மூல மந்திரத்தை 10 லட்சம் முறை அவன் ஜபித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. ராஜயோகம் தரும் லட்சுமியின் அருள் பெற்றவர்களில் இன்னொருவர் குபேரன். இவருக்கு 'ராஜாதி ராஜன்' என்ற சிறப்பு பெயருண்டு. தீபாவளியன்று நடக்கும் லட்சுமி பூஜையின் முடிவில் 'ஓம் குபேராய நம' என்று 108 முறை குபேர மந்திரம் சொல்லி தீபாராதனை காட்ட வேண்டும். இதை தினமும் சொன்னால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

