ADDED : மார் 24, 2022 05:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டால், அடுத்த பிறவி தெய்வப்பிறவியாக அமையும். ஜனன, மரண சக்கரத்தில் இருந்து விடுபட்டு உயிர் மோட்சம் பெறும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகமான சூரியன், பங்குனியில் சந்திரன் பலம் பெற்று கன்னி ராசியிலும், சூரியன் மீன ராசியிலும் இருப்பர்.
இருவரும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையால் பார்த்துக் கொள்வர். எனவே இந்நாளில் விரதமிருப்போருக்கு உடல், மனதால் செய்த பாவம் நீங்கும். உடல் நலம், நீண்ட வாழ்நாள், மனதைரியம் கிடைக்கும்.

