ADDED : ஜூன் 21, 2022 11:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அங்கும் இங்கும் தாவும் குரங்கு போல உள்ளதுதான் நமது மனம். அது எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இதனை 'மனம் ஒரு குரங்கு' என்பர். அனுமன் குரங்கு என்றாலும், அவரது ஆற்றல் அளவிட முடியாதது. ஆனால் அது அவருக்கு தெரியாது. கடல் தாண்டி இலங்கை செல்வதற்கு அனுமனுக்கு நம்பிக்கை கொடுத்தார் ராமபிரான். அவரும் ராமநாமத்தை ஜபித்தபடியே வெற்றியும் பெற்றார். இவரைப்போல பலரும் தங்களது பலத்தை அறியாமல் இருக்கிறார்கள். மனதை அடக்கி ராமநாமத்தை சொன்னால் போதும். எடுக்கும் எந்த முயற்சியிலும் வெற்றி பெறலாம்.

