ADDED : ஜூன் 23, 2017 09:01 AM

படைப்புக்கடவுளான பிரம்மா, ஒவ்வொரு யுகம் முடியும் காலத்திலும் சிவனால் அழிக்கப்படுவார். மீண்டும் உலகம் உருவாகும் போது உயிர்ப்பிக்கப் படுவார். இப்படி பிரம்மா 32 முறை அழிக்கப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றிருக்கிறார். இந்த 32 பிரம்மாக்களின் மண்டை ஓட்டினை (கபாலம்) சிவன் தன் கழுத்தில் மாலையாக அணிந்திருக்கிறார். அவரது தலையில் சூடியுள்ள சந்திரனில் இருந்து வழியும் அமிர்தம், கபாலத்தின் மீது பட்டதும் மண்டையோடு மாலை உயிர் பெற்று விடும். அந்த தலைகள் இசையுடன் பாடி, நடராஜரை வழிபடும். கபாலங்கள் பாடவும், நடராஜர் அதற்கேற்ப நடனமாட, உலகெங்கும் மகிழ்ச்சி பரவும். இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சங்கீத சாஸ்திரம் கூறுகிறது. இதன் அடிப்படையில் இசை, நடனம் கற்பவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்துகின்றனர்.

