ADDED : ஏப் 09, 2023 01:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை வானுலகம் சென்ற நபிகள் நாயகம், சிலர் கூட்டமாக நிற்பதை பார்த்தார். அவர்களது வயிறு கண்ணாடி போல காட்சியளித்தது. அதற்குள் பாம்புகள் வளைந்து கொண்டிருந்தன.
அங்கு இருந்த வானதுாதரிடம் இதற்கான காரணத்தைக் கேட்டார்.
'பாவத்தொழிலான வட்டி வாங்கி வாழ்க்கை நடத்தியவர்கள் இவர்கள். இதனால் இந்த நிலைமையில் இருக்கிறார்கள்' என பதில் கிடைத்தது.
பார்த்தீர்களா... வட்டியால் கிடைக்கும் லாபம் இனிக்கலாம். ஆனால் இறந்த பிறகு, வட்டி கட்டியவரின் வயிற்றெரிச்சல் பாம்புகளாய் மாறி வயிற்றில் குடியேறும். எனவே பாவத்தொழிலை செய்ய வேண்டாமே.

