
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசரான கலீபா அல்ரஷீத் அரசவைக்கு வந்தார். அப்போது அமைச்சர்களிடம் ஆளுக்கு ஒன்றாக வைரத்தை கொடுத்து, உடைக்க சொன்னார்.
'விலை உயர்ந்த பொருளை இப்படி யாராவது உடைப்பார்களா' என பேசிக் கொண்டனர். யாரும் உடைக்காத அந்த நேரத்தில் அபூநவாஸ் என்பவர் மட்டும் வைரத்தை உடைத்தார்.
இதைப்பார்த்த அரசர், ''நீ மட்டும் ஏன் உடைத்தாய்?'' எனக்கேட்க, ''இதை விட, உங்களை அதிகம் மதிக்கிறேன். உங்கள் சொல்லைக் கேட்பதுதான் உயர்ந்த செயல்'' என்றார் அபூநவாஸ்.

