
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முயல் ஒன்றிற்கு மரப்பொந்து தெரிய அதற்குள் சென்றது. அங்கு வசித்த மைனாவிடம் எனது இடத்திற்குள் எப்படி வரலாம் என முயல் அதட்டியது. இருவருக்கும் சண்டை தீவிரமானது. அந்த வழியாக பசியுடன் அலைந்த காட்டுப்பூனை, ''உங்கள் பிரச்னையை என்னிடம் சொல்லுங்கள்'' என அன்பாக கேட்டது.
பூனைக்கு அருகில் சண்டையிட்ட இருவரும் செல்ல, இருவரையும் கொன்றது பூனை. எந்த பிரச்னையையும் நாமே பேசி தீர்ப்பது நல்லது.

