ADDED : பிப் 22, 2022 12:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வீண் பேச்சு பேசுவோர் ஏழ்மை நிலையை அடைவர்.
* நாம் ஓய்வு எடுக்க நிழலான இடத்தில் அமர்வோம். அதுபோல்தான் நமக்கும் உலகுக்கும் உள்ள உறவு.
* ஒரு செயலை செய்வதற்கு முன் அதன் முடிவை எண்ணிப் பாருங்கள்.
* அதிகமான பாவங்கள் நாக்கினால்தான் உண்டாகின்றன.
* உப்பை நீர் கரைப்பது போல, நல்ல குணம் பாவத்தை கரைத்துவிடும்.
* உங்களை நம்பி ஒருவர் சொல்லும் செய்தியை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
* வட்டி எவ்வளவுதான் வருமானத்தை பெருக்கினாலும் அதன் முடிவு குறைந்து போகக்கூடியதே.
- பொன்மொழிகள்

