sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

15

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 58

மாவட்ட அதிகாரி கொடுத்த டார்ச்சர் தாங்காம ஊராட்சி செயலர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்

ஷார்ட்ஸ்

15-Jul-2025

அசுவினி பிறர் ஆச்சரியப்படும் வகையில் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது, பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வது, பூர்வீக சொத்து விவகாரத்தில் அவசரப்படாமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். மாதம் முழுவதும் யோகக் காரகனான ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.  வரவேண்டிய பணம் வரும். முடங்கி கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில்  சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். எதிரிகளால் சங்கடங்கள் உண்டாகும் என்றாலும், அதை சமாளித்திடக்கூடிய நிலை உங்களுக்கு உருவாகும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதியில் ஆதாயம் அதிகரிக்கும்.  குடும்பத்தில் பொன், பொருள் சேரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.சந்திராஷ்டமம்: ஆக. 3அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 25, 27, ஆக. 7, 9, 16பரிகாரம்: விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.பரணிநினைத்ததை சாதிக்கும் வரை ஓய்வின்றி உழைக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும் அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன் ஜூலை 27 வரை தன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். புதிய வீடு, வாகனம், ஆபரணம் என்ற கனவு நனவாகும். ஆக.8 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். வாங்க நினைத்தவற்றை வாங்குவீர்கள் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் ஜூலை 30 முதல் சத்துரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். தொழில், வியாபாரம், வேலையில் இருந்த எதிர்ப்புகள் மறைமுகத் தொல்லைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். காவல் துறையினருக்கு நீண்ட நாள் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஆக.4அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 24, 27, ஆக. 6, 9பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வேண்டுதல் பலிக்கும்.கார்த்திகை 1 ம் பாதம் எந்த நேரத்திலும் தன் செல்வாக்கை இழக்காத உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதம். சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் களத்திர, பாக்கிய, லாப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பெரிய மனிதர்களுடைய தொடர்பும், ஆதரவும் ஏற்படும். குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வருவதுடன், குல தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வீர்கள். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் லாபம் தரும். புதிய முயற்சி முன்னேற்றத்தை உண்டாக்கும். ஜூலை 30 முதல் ராசிநாதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். வம்பு, வழக்குகள் என்றிருந்த நிலை மாறும். ஆரோக்கியம் மேம்படும். ஆக.3 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொருளாதார நிலையில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஒவ்வொன்றிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். புதிய வாகனம், நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கடன் தொல்லை நீங்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விளைச்சல் லாபம் தரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஆக.5அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 19, 27, 28, ஆக. 1, 9, 10.பரிகாரம்: முருகனை வழிபட நினைத்த செயல் நடந்தேறும்.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்; நினைத்ததை சாதிப்பதில் முதலிடம் வகிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். முயற்சி ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நடந்தேறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுய தொழில் புரிவோருக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பால் இழுபறி வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உங்கள் செல்வாக்கும், அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவும், தொண்டர்களின் பலமும் உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். அரசுவழி முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும். உடல் பாதிப்பு விலகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சேமிப்பு உயரும். தாயாரின் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றும். சந்திராஷ்டமம்: ஆக. 5, 6அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 24, 28, ஆக. 1, 10, 15.பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட நன்மை உண்டாகும்.ரோகிணி: தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேற்றம் அடையும் உங்களுக்கு ஆடி மாதம் முன்னேற்றமான மாதம். வேலையில் இருந்த பிரச்னைகள், நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ஊதிய உயர்வும் சலுகைகளும் கிடைக்கும். ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லக்கூடிய நிலை உண்டாகும். தொழிலில் ஆதாயம் கூடும். உங்கள் திறமை வெளிப்படும். குருவின் பார்வைகள் ருணரோக, அஷ்டம, ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு வெற்றியாகும். மறைந்திருந்த உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எதிர்பார்த்த வரவு வரும். திறமைக்கேற்ற வேலையில்லை தகுதிக்கேற்ற ஊதியமில்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்களின. நிலை மாறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நீண்டநாள் கனவு நனவாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஜூலை 25 முதல் சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வேலை தேடி வந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். மாதுர் ஸ்தானத்தில் கேது செவ்வாய் சஞ்சரிப்பதால் தாயாரின் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: ஆக. 6, 7அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 24, 29. ஆக. 2, 11, 15பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: செயல்களில் வேகமும் எடுத்த வேலைகளை முடிக்கும் திறமையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். தைரிய வீரிய காரகனான செவ்வாய் ஜூலை 30 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் இணைவதால் உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். தாய்வழி உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். ஜூலை 30 முதல் ஐந்தாம் இடத்திற்குச் செல்லும் செவ்வாய் எதிர்பாராத நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். உங்களுக்குண்டாகும் நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பர். எதிரிகளால் ஏற்படும் தொல்லை, வியாபாரத்தில் உண்டாகும் போட்டி, இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை பாதிப்பு விலகும். உங்கள் நிலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் சென்று தங்க வேண்டிய நிலை ஏற்படும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். வயதானவர்களுக்கு உடல் பாதிப்பு விலகும்.சந்திராஷ்டமம்: ஆக. 7.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 24, 27, ஆக. 6, 9, 15.பரிகாரம்: மாரியம்மனை வழிபட மனக்கவலை நீங்கும்.

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புத்தி சாதுரியத்தால் எதையும் சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். ஜூலை 30 வரை தைரிய வீரிய பராக்கிரம காரகனான செவ்வாய் சகாய ஸ்தானத்தில் ஞான மோட்சக் காரகனுடன்  சஞ்சரிப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நினைத்ததை சாதிக்க முடியும். ஜென்ம குரு அலைச்சலை அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். பாக்கிய ஸ்தான ராகு உங்கள் அந்தஸ்தை உயர்த்துவார். நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார். பல வழியிலும் பணம் வர ஆரம்பிக்கும். வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும் என்றாலும் இரண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஆக. 7.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட நினைப்பது நடந்தேறும்.திருவாதிரை; உழைப்பின் வழியே உயர்வை அடைந்து வரும் உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்ட வாய்ப்பு தானாக தேடி வரும். அந்நியரால் ஆதாயம் கிடைக்கும். பிறக்கும் ஆடி மாதம் உங்கள் வாழ்வில் முன்னேற்றமான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்கிரம் அடைந்தாலும், குரு பார்வையுடன் அங்கு ராகு சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பணியில் இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம் வளர்ச்சி பெறும். தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். நீண்ட நாளாக தள்ளிப்போன குலதெய்வ வழிபாட்டை இந்த மாதத்தில் மேற்கொள்வீர்கள். விஐபிகள் ஆதரவால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். மூன்றாம் இடம் கேது உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். ஒவ்வொரு வேலைக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்த்திருந்த நிலை மாறி ஒவ்வொன்றையும் நீங்களே செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருட்களும் புதிய வாகனமும் உங்கள் வீட்டை அலங்கரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோரின் ஏக்கம் தீரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விவசாயிகள் கவலை விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும்.சந்திராஷ்டமம்: ஆக. 8.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 22, 23, 31. ஆக. 4, 5, 13, 14.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடங்கள் நீங்கும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: குரு அருளுடன் உயரிய குணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் குரு சஞ்சரித்தாலும் அவருடைய மூன்று பார்வைகளும் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதுநாள் வரை உங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள், நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம், போராட்டம் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். நண்பர்களால் ஆதாயம் கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பாக்கிய ஸ்தானம் பலம் அடைவதால் இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். உங்கள் வேலைகளுக்கு பெரிய மனிதர்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் இருப்பர். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைத்து வெளியூருக்கு செல்ல நேரும். நீண்ட நாளாக வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் உங்கள் நிலையில் உயர்வு தோன்றும். கையில் பணம் புழங்கும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேரும். கணவன், மனைவிக்குள் இருந்த இடைவெளி விலகும். குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: ஆக. 9.அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 21, 23, 30. ஆக. 3, 5, 12, 14.பரிகாரம்: குருபகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

புனர்பூசம் 4 ம் பாதம்; மனசாட்சியின்படி செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் குரு சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ம் இடங்களுக்கு உண்டாவதால் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வரும் பாதிப்பு உங்களை நெருங்காது. உடல் நிலையில் உண்டான நெருக்கடி விலகும். எதிரிகளால் தோன்றிய அவமானம் விலகும். செல்வாக்கு உயரும். செய்துவரும் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் உங்களிடம் வந்து சரணடையும் நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும் என்றாலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சூரியனால் படபடப்பு, அவசரம், வேகம் என்ற நிலையெல்லாம் இருக்கும். அதன் காரணமாக செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மனதிலும் குழப்பம் உண்டாகும் என்பதால் இக்காலத்தில் நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். பின்விளைவு பற்றி யோசித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். சொத்து விற்பது, வாங்குவது போன்ற முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சிறு பிரச்னைகள் தோன்றுவதற்கு வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 9, 10.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 21, 29, 30. ஆக. 2, 3, 11, 12.பரிகாரம்: தில்லை காளியை வழிபட சங்கடம் நீங்கும்.பூசம்: நினைத்ததை சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்கிரம் அடைந்திருப்பதால் அவரால் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்காது. அதே நேரத்தில் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கு கிடைப்பதால் அங்கே சஞ்சரிக்கும் ராகுவாலும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. உடல்பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். உங்கள் செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும். எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்படுவீர்கள். ஜூலை 30 முதல் ரத்தக்காரகன் செவ்வாய் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தைரியம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். நினைத்தது நடந்தேறும். வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வாக்கு உயரும் என்றாலும், குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பணவரவில் தடை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் குழப்பங்களை உண்டாக்கலாம் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. ஜென்ம சூரியன் உங்கள் வேலைகளை வேகப்படுத்துவார் என்றாலும் வேலைக்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வேலையிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள், வழக்குகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். தாய்வழி உறவுகளின் ஆதரவால் நினைத்தது நடந்தேறும். அதிர்ஷ்டக் காரகனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். உழைப்பாளர்கள் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: ஆக. 10, 11.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 20, 26, 29. ஆக. 2, 8.பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை நடக்கும். ஆயில்யம் :  நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு ஆடி மாதம், முயற்சியால் வெற்றி பெறக் கூடிய மாதம். ஜூலை 24 வரை புதன் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் கவனம் தேவை. பத்திரம், பாண்டு போன்றவற்றில் கையெழுத்திடும் முன் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. ஜூலை 25 முதல் விரய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். சிலர் கடன்காரர்களை சமாளிப்பதற்காக நகைகளை அடகு வைக்கும் நிலை உண்டாகும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை சுக ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கவுரவம், செல்வாக்கு, அந்தஸ்திற்கு பாதகம் ஏற்படாது. சிலர் புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். அஷ்டம ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் உங்கள் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும். ஜூலை 30 முதல் தைரியக்காரகன் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகும். உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண முடியும். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்பதும். வரவு செலவில் கவனமாக இருப்பதும் நன்மையாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும்.சந்திராஷ்டமம்: ஆக.11, 12.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 23, 29. ஆக. 2, 5, 14.பரிகாரம்: அழகரை வழிபட நினைத்தது பலிக்கும். 

மகம்: மனதில் எண்ணியதை உடனே நடத்த வேண்டும் என்ற வேகம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். இந்த மாதத்தில் சிம்ம ராசியினரும் போராட்டத்திற்கு மேல் போராட்டத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஜென்ம ராசிக்குள் மோட்சக் காரகன் கேதுவும் ஜூலை 30 வரை செவ்வாயும் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல் உங்களுக்கு தேவையான காலத்தில் உதவிகள் தேடி வரும். தொழிலிலும் வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். குருவின் பார்வை 3, 5, 7 ம் இடங்களுக்கு உண்டாவதால் எத்தகைய பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி உண்டாகும். சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைப்பதுடன் உங்கள் முயற்சிக்கும் அவர்கள் உதவியாக இருப்பர். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலக ஆரம்பிக்கும். ஜூலை 25 முதல் ஆக. 8க்குள் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணியில் இருந்த நெருக்கடி விலகும். ஜூலை 30 முதல் தன குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.   வார்த்தைகளில் கவனமாக இருப்பதும், வரவு செலவில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை. விவசாயிகள் முயற்சிகளை மேற்கொள்ளும்முன் சூழல் அறிந்து செயல்படுவது நல்லது.  சந்திராஷ்டமம்: ஆக. 12, 13.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 25, 28. ஆக. 1, 7, 10, 16.பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.பூரம்: அதிர்ஷ்டக்காரகனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முயற்சியால் வெற்றி அடைய வேண்டிய மாதம்.  ஜூலை 27 வரை சுக்கிரன் 10ம் இடத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். சேமிப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்காக கையில் இருப்பதை அடகு வைத்தும் பணம் தேடுவீர்கள். வரவேண்டிய பணமும் இழுபறியாகும் என்றாலும் அதன் பிறகு நிலைமை சீராகும். வருவாய் அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலர் நீண்டநாளாக தள்ளிப்போன குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். மாதம் முழுவதும் கேது சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு ரத்த சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு உங்களை பயமுறுத்தும். எந்தவிதமான  குழப்பங்களுக்கும், பயத்திற்கும் இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. திசா புத்தி சாதகமாக இருந்துவிட்டால் எத்தகைய பாதிப்பும் உங்களை நெருங்காமல் போகும். லாப ஸ்தானத்தில் குரு சாதகமாக சஞ்சரிப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். நண்பரால் ஆதாயம் கூடும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும், ஜூலை 30 முதல் தன குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் உருவாகும். வரவு செலவிலும் நெருக்கடி ஏற்படும். வருமானம் வந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போகும் நிலை சிலருக்கு ஏற்படும். இந்த மாதத்தில் ஒப்பந்தங்கள், பத்திரங்களில் கையெழுத்திடும் நிலை வந்தால் கையெழுத்திடும் முன் கவனமாக படித்துப் பார்க்க வேண்டும். தனியாரிடம் கடன் வாங்குபவர்கள் விழிப்புடன் இருப்பது நன்மையை உண்டாக்கும். இக்காலம்  எதிர்மறையான காலம் என்பதுடன், ராசிநாதனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: ஜூலை. 17. ஆக. 13, 14.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 24, 28. ஆக. 1, 6, 10, 15.பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்: எந்த நிலையிலும் தன் சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காத உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் போராடி வெற்றி பெற வேண்டிய மாதம். விரய ஸ்தானமான 12ம் இடத்தில் ராசிநாதன் சஞ்சரிப்பதால் பல வகையிலும் செலவு ஏற்படும். செலவிற்கேற்ற வருமானம் வராமல் போகும். அதற்காக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும். வியாபாரிகள் கணக்கு வழக்கை இந்த நேரத்தில் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வழக்கு, அபராதம் கட்ட வேண்டிய நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் எதிர்மறையான மாதமாக இருக்கும். தலைமையிடமும் தொண்டர்களிடமும் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவும் குழப்பத்திற்கு மேல் குழப்பத்தை ஏற்படுத்துவார். தடுமாற்றங்களை அதிகரிப்பார். பிறரைப் பற்றி புரிந்து கொள்ள வைப்பார். நீங்கள் யாரை நம்பினீர்களோ அவர்கள் கூட இந்த நேரத்தில் உங்களுக்கு உதவ யோசிப்பார்கள். மாதத் தொடக்கத்தில் புதன் வக்கிரமாக இருந்தாலும், ஜூலை 25 முதல் ஆக. 3 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நன்மைகள் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மங்களகாரகன் குருவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிரச்னை வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். பணியில் இருந்த பிரச்னைகளை அதிகாரியின் துணையுடன் முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் வேலைகளுக்கும் முயற்சிக்கும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் பெறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 18. ஆக. 14அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 28. ஆக. 1, 10பரிகாரம்: காலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும்.

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். சுபிட்சங்களை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகளை சாதகமாக்குவார். அரசியல்வாதிகளின் நிலையை உயர்த்துவார். தலைமையின் ஆதரவும் சிலருக்கு புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்க வைப்பார். பலவழிகளிலும் பணம் வர ஆரம்பிக்கும்.  குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். மனதில் உற்சாகம் உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். முதலீட்டிற்கு ஏற்ற லாபம் இல்லையே என்ற நிலை மாறும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக தள்ளிப் போன குலதெய்வ வழிபாட்டை  மேற்கொள்வீர்கள். உறவினர்கள் நிலை அறிந்து அவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் ஜூலை 26 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். விவசாயிகள் இம்மாதம் கவனமாக செயல்படுவது நல்லது. பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 18, 19. ஆக. 14, 15அதிர்ஷ்ட நாள்: ஜூலை 23, 28. ஆக. 1, 5, 10பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.அஸ்தம்: தெளிவான சிந்தனையுடன் திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு ஆடி மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சூரியன், சத்துரு ஜெய ஸ்தானத்தில் ராகு, ராசிநாதன் புதனின் சஞ்சார நிலை, அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நினைத்தபடி இந்த மாதத்தில் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசு வழியில் நீண்ட நாளாக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயம் தரும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 2, 4, 6 ம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம், தொழிலில் எதிர்ப்பு, போட்டி இல்லா நிலை உருவாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். மாதம் முழுதும் ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஷேர் மார்க்கட்டில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சிலர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். நீண்ட நாளாக தள்ளிப் போன கோயில் வழிபாட்டை  குடும்பத்துடன் மேற்கொள்வீர்கள். தானம் தர்மம் என்று செய்யும் அளவிற்கு உங்கள் மனம் இளகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு விலகி உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 19, 20. ஆக. 15, 16.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 23, 29. ஆக. 2, 5, 11, 14.பரிகாரம்: மீனாட்சி அம்மனை தரிசிக்க வேண்டுதல் நிறைவேறும்.சித்திரை 1, 2 ம் பாதம்: எந்த ஒன்றிலும் வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ரத்தக்காரகனான செவ்வாய் ஜூலை 30 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வகையிலும் செலவு ஏற்படும். கையிருப்பு கரையும். அலைச்சல் அதிகரிக்கும். முன்பின் தெரியாதவர்களை நம்பி சில வேலைகளில் ஈடுபட்டு நஷ்டமடைய வேண்டிய நிலை உருவாகும். ஜூலை 30 முதல் ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். அதே நேரத்தில் குழப்பமும் அதிகரிக்கும். எதை முன்னால் செய்வது? எதைப் பின்னால் செய்வது என்ற முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்கள். அதன் காரணமாக சில வாய்ப்புகள் நழுவிப் போகும் என்றாலும், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். நெருக்கடி வந்தாலும் சமாளித்து முன்னேற்றமடைவீர்கள்.  செலவிற்கேற்ற வருமானம் வரும். 6ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதுடன் குருபார்வையும் அங்கு உண்டாவதால் உடல் பாதிப்பு விலகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, நெருக்கடி இல்லாமல் போகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். ராசிநாதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய இடம், வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை அமையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஜூலை 26 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். உதவி கேட்டவர்களுக்கு அவர்களின் நிலை அறிந்து உதவி செய்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற வார்த்தையின்படி விவசாயத்தில் கவனம் செலுத்துவீர்கள்.சந்திராஷ்டமம்: ஜூலை 20. ஆக. 16.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட சங்கடங்கள் விலகும்.

சித்திரை 3, 4: நினைத்ததை சாதிக்கும் வரை  முயற்சியை கைவிடாத உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும். தைரிய வீரிய காரகனான செவ்வாய் ஜூலை 30 வரை லாப ஸ்தானத்தில், ஞான மோட்சக் காரகனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். விற்பனை அதிகரிக்கும். வருமானம் உயரும். சிலருக்கு இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஜூலை 30 முதல் செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து செலவுகளை உண்டாக்கினாலும் மாதம் முழுவதும்  கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருவாயில் தடை இருக்காது. தட்டுப்பாடு இல்லாமல் கையில் பணம் புரளும். நினைத்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். உங்களுக்கு லாபாதிபதியான சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாடு செல்வதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம், தொழிலை விரிவு செய்வீர்கள். சிலருக்கு மாதத்தின் பிற்பகுதியில் புதிய சொத்து சேரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் மேற்கொள்ளும் முயற்சி லாபம் தரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 20, 21.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 24, 27. ஆக. 6, 9, 15.பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை வழிபட நினைத்தது பலிக்கும். சுவாதி: முன்னேற்றப் பாதையில் நடை போடும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதம். யோகக்காரகன் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருக்கு குருவின் பார்வை கிடைப்பதால் உங்கள் கனவுகள் நனவாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள், ஏற்பட்ட அவமானங்கள் விலகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்குகள் சாதகமாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பாக்கிய ஸ்தான குரு வரவை அதிகரிப்பார். நீண்டநாள் கனவுகளை நனவாக்குவார். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், செல்வாக்கு, பட்டம், பதவி என கனவுகள் நனவாகும். சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கூடும். உடல் பாதிப்பு விலகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். ஆக. 8 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரம் தொழிலுக்காக கேட்டிருந்த பணம் வரும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த சங்கடங்கள், குழப்பங்கள் விலகும். பொருளாதார நிலை உயரும்.  நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாமல் இருந்த குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். செலவிற்கேற்ற வரவு வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். எதிர்காலம் பற்றிய அக்கறை உண்டாகும். சந்திராஷ்டமம்: ஜூலை 21, 22.அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 24, 31. ஆக. 4, 6, 13, 15.பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.விசாகம் 1, 2, 3: பிறருக்கு வழிகாட்டியாகவும் சமூகத்தில் அந்தஸ்து மிக்கவராகவும் வாழும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். அலட்சியமாக உங்களைப் பார்த்தவர்களும் ஆச்சரியமாக பார்க்கும் நிலையினை ஏற்படுத்துவார். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வசதி வாய்ப்பு கூடும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சகோதரர்களின் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தானம் பலமடைவதால் பொருளாதார நிலை உயரும். பிறருக்கு உதவி செய்திடும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். ஆக.8 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வாங்க நினைத்த சொத்தை வாங்குவீர்கள். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்டக்காரகனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவில் இருந்த தடை விலகும். பொன், பொருள் சேரும். வியாபாரிகளுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் நிலை உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 22அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 24, 30. ஆக. 3, 6, 12, 15பரிகாரம்: குருபகவானை வழிபட நன்மைகள் நடந்தேறும்.

விசாகம் 4 ம் பாதம் : மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி சங்கடத்திற்கு ஆளானாலும் பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். நட்சத்திராதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம், குழப்பம் ஏற்படலாம். பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் செயல்பட்டு நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். குருவின் பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் விரய செலவு கட்டுப்படும். வீண் அலைச்சல் குறையும். உறக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான துாக்கம் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பணவரவு சீராகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குருபார்வை உண்டாவதால் இதுவரை இருந்த போராட்டங்கள் முடிவிற்கு வரும்.  தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் ஜூலை 30 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடைபெற ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் போராட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். சிலருக்கு சொத்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பணியில் இருந்த நெருக்கடி விலகும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வேலையில் உயர்வு உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நன்மையான மாதமாக இருக்கும். குலதெய்வ வழிபாட்டால்  பகை விலகும்.சந்திராஷ்டமம்: ஜூலை. 22அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 21, 27, 30. ஆக. 3, 9, 12பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.அனுஷம்: நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்து வந்த உங்கள் நட்சத்திராதிபதி வக்கிரம் அடைந்திருப்பதால் நெருக்கடிகள் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். கடந்த மாதம் வரை இருந்த போராட்ட நிலை மாறும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கோயில்களுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வர். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். ஜூலை 30 முதல் ராசி நாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலையும் செல்வாக்கும் உயரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜூலை 26 முதல் சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் நன்மை அதிகரிக்கும். எதிர்பாலினரால் ஏற்பட்ட தொல்லை விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஜீவன ஸ்தானத்தில் தொடர்ந்து கேது சஞ்சரித்து வருவதால் தொழிலில் கூடுதலாக அக்கறை செலுத்துவது நல்லது. பணியாளர்கள் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், சட்டத்திற்கு புறம்பாக செயல்படாமல் இருப்பது மிக அவசியம். இல்லையெனில் நெருக்கடி, சட்ட சிக்கல்களுக்கு ஆளாகலாம். மாதத்தின் பிற்பகுதியில் சிலருக்கு சொத்து சேரும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். விவசாயிகள் சிந்தித்து செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை 22, 23.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 18, 26, 27. ஆக. 8, 9.பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.கேட்டை: வேகம் விவேகத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறும் உங்களுக்கு, ஆடி நன்மையான மாதமாகும். கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் புத்தி சாதுரியமும் திறமையும் வெளிப்படும். உடல் பாதிப்பு நீங்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். ஜூலை 25 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். தொழிலை விருத்தி செய்வதற்காக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். விரய செலவுகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் மாற்றம் ஏற்படும். ஜூலை 26 வரை எதிர்பாலினரால் கவனம் சிதறும். அதன் பிறகு நன்மை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பிள்ளைகளின் மீதான அக்கறை அதிகரிக்கும். வருமானத்தை நோக்கி உங்கள் கவனம் செல்லும். ஜூலை 30 முதல் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களால் ஆதாயம் கூடும். அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயம் தரும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். விவசாயிகளுக்கு இந்த மாதம் நன்மையான மாதம். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். உழைப்பாளர்கள் போற்றப்படுவர். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை. 23, 24அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 18, 27. ஆக. 5, 9, 14பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

மூலம் : வாழ்வின் அர்த்தம் தெரிந்து வாழும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஞான மோட்சக் காரகன் கேது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளிலும் பின் விளைவுகள் பற்றி தெரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும். அஷ்டம ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சஞ்சரிப்பதால் அரசு வழியில் நெருக்கடி ஏற்படலாம். சிலர் சட்ட ரீதியான பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கலாம். உடல்நிலையில் பாதிப்பு தோன்றலாம். கணக்கு வழக்குகளில் கவனமாக இல்லாத வியாபாரிகள் அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் சங்கடமெல்லாம் விலகிப் போகும். செயல்களில் கவனம் இருக்கும். நினைத்ததை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். எதிர்ப்பு மறைமுகத் தொல்லை என இருந்ததெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குருவின் பார்வை கிடைப்பதால் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். நினைப்பதெல்லாம் நடந்தேறும். வரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு எந்த நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். சிலருக்கு ஆக. 3 க்கு பிறகு புதிய சொத்து சேரும். குலதெய்வ வழிபாட்டை ரத்த உறவுகளுடன் மேற்கொள்வீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலாளர்கள், முதலாளிகள் ஆலோசனையின்படி செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: ஜூலை 24, 25.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 30. ஆக. 3, 7, 12, 16.பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.பூராடம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து வெற்றி பெறும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். நட்சத்திராதிபதி சுக்கிரன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றி மறையும். எதிர்பாலினரால் உங்கள் வேலைகளில் தடுமாற்றம் ஏற்படும். சிலர் காதல் வலையிலும் சிக்கக் கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு ராசியை பார்ப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இதுவரை தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும். தைரிய வீரிய ஸ்தானம் பலமடைவதால் நினைத்ததை சாதித்திடக்கூடிய அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். ஆக. 3 முதல் உங்கள் ஜீவனாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இடம், வீடு, புதிய பொருள் சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குல தெய்வ அருளால் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 25, 26.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 24, 30. ஆக. 3, 6, 12, 15.பரிகாரம்: ஸ்ரீரங்க நாதரை வழிபட சங்கடங்கள் விலகும்.உத்திராடம் 1 ம் பாதம்: பிறரை வழிநடத்தும் திறமையும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் பாக்கியாதிபதியும் நட்சத்திர அதிபதியுமான சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் இதுவரை இருந்த முன்னேற்றமான நிலையில் எதிர்பாராத பின்னடைவு ஏற்படும். உங்கள் கவனக் குறைவால் காரியத்தில் தடைகளையும், பொருளாதாரத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். உடல் நிலையில் பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும். வியாபாரம், தொழிலில் நெருக்கடி உருவாகும். சிலர் அரசுக்கு அபராதம் செலுத்தும் நிலை உருவாகும். ராசிநாதன் 7ல் சஞ்சரித்து லாப ஸ்தானம், ராசியை பார்ப்பதால் அனைத்தையும் சமாளித்திடக்கூடிய நிலை உருவாகும். எதிர்பார்த்த வருவாய் வரும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால்  முயற்சிகள் வெற்றியாகும். அதன் வழியாக எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். ஆக. 3 முதல் பூமி, வீடு சம்பந்தமான நீண்டநாள் கனவு நனவாகும். புதிய முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சார நிலை எதிர்மறையாக இருப்பதால் எதிர்பாலினரால் இழப்புகளை சந்திக்கும் நிலை சிலருக்கு ஏற்படும் என்பதால் சுய ஒழுக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது ஞானத்தை அதிகரிப்பார். தடைபட்ட குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வைப்பார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை போக்குவார். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி குறைந்து இணக்கம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூலை 26.அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 19, 21, 28, 30. ஆக. 1, 3, 10, 12.பரிகாரம்: அதிகாலையில் நீராடி சூரியனை வழிபட குழப்பம் விலகும்.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெறும் உங்களுக்கு, திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாக ஆடி. சப்தம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை வெளியூரிலும் தொடங்க முயற்சி மேற்கொள்வர். சிலர் வசிக்கும் இடத்தை, ஊரை விட்டு வேறு இடத்திற்கு மாறுவதற்கு முயற்சிப்பீர்கள். இவையெல்லாம் தொழில் காரணமாகவும், பணியின் காரணமாகவும் ஏற்படும் நிலையாகும். மாதம் முழுவதும் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு எதிர்ப்புகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தினாலும், அவரது பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். தொழிலை முன்னேற்றம் அடைய வைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். விரய செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். வரவு செலவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும், ஜூலை 30 வரை செவ்வாயும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் அல்லது எதிரிகளால் இடையூறுகள், அவமானம் என்று சிலருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால் சுய ஒழுக்கத்திலும் உடல் நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது.  குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும் அவர்களை அனுசரித்துச் செல்வதும் அவசியம். சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தேவையான பணம் வரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 26, 27.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 19, 28. ஆக. 1, 8, 10.பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்ற நன்மை உண்டாகும்.திருவோணம்: நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் குழப்பமின்றி செயல்பட வேண்டிய மாதமாகும். ஜூலை 26 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜூலை 27 முதல் ஆக 3 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தடைபட்ட பணம் வரும். சிலருக்கு புதிதாக சொத்து சேரும். குருபார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சிலர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மனதில் குழப்பம் விலகும். புதிய நம்பிக்கை பிறக்கும். பெரியோர்களின் ஆதரவும் உறவுகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நேரம் காலம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள் என்றாலும், 7 ம் இட சூரியன் இடமாற்றத்தை ஏற்படுத்துவார். அஷ்டம கேது உடல் நிலையில் நலிவை உண்டாக்குவார் என்பதால் கவனமாக இருப்பது அவசியம். பிரச்னைகள் வரும் என தெரியும் நிலையில் வேலைகளில் ஈடுபடாமல் இருந்தாலே சங்கடம் ஏற்படாது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை. 27, 28.அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 17, 20, 26, 29, ஆக. 2, 8, 11.பரிகாரம்: திங்களன்று சந்திர பகவானை வழிபட சங்கடங்கள் விலகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்: அசாத்திய துணிச்சலும் தைரியமும் கொண்ட உங்களுக்கு நிதானமாக செயல்பட வேண்டிய மாதம் ஆடி. தைரிய வீரிய காரகனான செவ்வாய் ஜூலை 30 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். எதிரிகளின் கை மேலோங்கும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவர். அதனால் உங்கள் மனம் சங்கடத்திற்கு ஆளாகலாம். வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். குருபார்வை ஜீவன ஸ்தானத்திற்கும் தன ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் தொழில் வழியாக ஆதாயம் உண்டாகும். பணியிடத்தில் நெருக்கடிகள் நீங்கும். நிம்மதியான நிலை ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். ஜூலை 25 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் திட்டங்கள் பலிதமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். ஜூலை 26 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். பொன் பொருள் வாகனம் வாங்குவீர்கள். சிலர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உழைப்பாளர்களின் நிலை உயரும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை. 28.அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 17, 18, 26, 27. ஆக. 8, 9, பரிகாரம்: திருப்போரூர் முருகனை வழிபட சங்கடம் விலகும். 

அவிட்டம் 3, 4 ம் பாதம்: எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். மாதம் முழுவதும் ராசிநாதன் வக்கிரம் அடைந்திருந்தாலும் சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை அகற்றுவார். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் கை மேலோங்கும். ஜென்ம ராசிக்கு குருபார்வை உண்டாவதால் எடுக்கும் முயற்சி எல்லாம் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு நனவாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள், பிரச்னைகள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். பொன், பொருள் சேரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ரத்த உறவுகளுடன் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியில் இருந்த நெருக்கடி முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பூமிக்காரகன் செவ்வாயின் சஞ்சாரநிலை எதிர்மறையாக இருப்பதால் விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் தங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் ஒவ்வொன்றையும் உங்கள் நேரடி கண்காணிப்பில் செய்யும் போது எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 29அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 18, 26, 27. ஆக. 8, 9பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் விலகும்.சதயம்: எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் யோகக் காரகன் ராகு சஞ்சரித்தாலும் 5ம் இட குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்கள் நிலையில் இருந்த பாதிப்பு, போராட்டம், பிரச்னைகள் யாவும் விலகும். மனஅழுத்தம் நீங்கும். நீண்ட நாள் கனவு நனவாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜூலை 26 முதல் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். ஆக. 3 முதல் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் இருந்த நெருக்கடி விலகும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் ஜூலை 30 வரை செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நன்மையை ஏற்படுத்தும்.சந்திராஷ்டமம்: ஜூலை 29, 30.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 22, 26, 31. ஆக. 4, 8, 13.பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: தெளிந்த ஞானமும் திடமான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும். மங்களகாரகன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரை இருந்த நெருக்கடி, போராட்டம் யாவும் விலகும். பணியில் ஏற்பட்ட வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவும், தெய்வ அருளும் கிடைத்து எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். சாதாரணமாக தொடங்கிய தொழிலும் இக்காலத்தில் அதிக வருமானத்தை தரும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இழுபறியாக இந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாதத்தின் பிற்பகுதியில் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். வங்கியில் கேட்டிருந்த கடனுதவி கிடைக்கும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பொருளாதார நிலை உயரும் என்றாலும் ஜூலை 30 முதல் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: ஜூலை 30, 31.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 21, 26. ஆக. 3, 8, 12.பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட மனக்கவலை விலகும்.

பூரட்டாதி 4 ம் பாதம் : எந்த ஒன்றையும் தெளிவாக திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். ராசிநாதன் 4 ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் அவருடைய பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் இதுவரை இருந்த உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். நெருக்கடி விலகும். பிறரால் ஏற்பட்ட சங்கடம், அவமானம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம் அதிகரிக்கும். திடீர் வரவால் வாழ்க்கை வளமாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விரய செலவு கட்டுக்குள் வரும். நிம்மதியான துாக்கம் இல்லை என அவதிப்பட்டு வந்த நிலை மாறும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஜூலை 25 முதல் ஆக.3 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த வரவு வரும் என்றாலும், அதன் பிறகு கவனமாக செயல்படுவது நல்லது. சிலருக்கு வீண் பழிச்சொல்லும் ஏற்படும் என்பதால் சுய ஒழுக்கத்திலும் இக்காலத்தில் கவனம் தேவை. அந்நியரிடம் ஓரடி விலகி இருப்பது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் குடும்பத்திலும் உறவுகளிடமும் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். பொருளாதார நிலை உயரும். பொன் பொருள் சேரும். உழவுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். பணியாளர்களின் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 31அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 30. ஆக. 3, 12பரிகாரம்: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.உத்திரட்டாதி: நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதம். ராசிநாதன் 4 ம் இடத்தில், நட்சத்திராதிபதி விருது ஸ்தானத்தில் என்ற நிலை இருந்தாலும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது மாதம் முழுவதும் உங்கள் நிலையில் முன்னேற்றம் தருவார்.  நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி, குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பிறரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். செல்வாக்கு உயரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். ஜூலை 30 வரை உங்கள் தன, குடும்பாதிபதி செவ்வாயும் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அசாத்தியமான துணிச்சல் ஏற்படும். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகளை ஒவ்வொன்றாக முடிவிற்கு கொண்டு வருவீர்கள். குருபார்வைகள் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். என்னதான் சம்பாதித்தாலும், கையில் பணம் தங்கவில்லையே என்ற நிலை மாறும். விரய செலவு குறையும். சேமிப்பு அதிகரிக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் என்று வாங்குவர். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும் என்றாலும் ஆக. 3 முதல் புதனின் சஞ்சாரம் சில சங்கடங்களை ஏற்படுத்தும். உங்களைத் துாற்றுவதற்கு நேரம் காலம் பார்த்திருந்தவர்கள் உங்களுக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்வார்கள் என்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது நன்மையாகும். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும், வரவு செலவில் கவனமாக இருப்பதும் நன்மையை அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வயதானவர்கள் உடல்நிலை சீராகும். சந்திராஷ்டமம்: ஆக. 1.அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 17, 21, 26, 30. ஆக. 3, 8, 12.பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நன்மையை உண்டாக்கும்.ரேவதி: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். ஜூலை 25 முதல் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். இடம், வீடு சம்பந்தப்பட்ட விவகாரம் முடிவிற்கு வரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் செயல்களை லாபமாக்குவார். தைரியத்தை அதிகரிப்பார். மற்றவரால் முடியாது என கைவிட்ட வேலைகளை உங்கள் கையில் எடுத்து முடித்து ஆதாயம் காண்பீர்கள். மாதம் முழுவதும் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் கோரிக்கை நிறைவேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஜூலை 30 வரை செவ்வாயும் சாதகமாக சஞ்சரிப்பதால் வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சகோதரர் ஒற்றுமை அதிகரிக்கும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வம்பு வழக்கு என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். குரு பார்வைகளால் உங்களை பயமுறுத்தி வந்த பிரச்னைகள் விலகும். பிறரால் சந்தித்த அவமானம்  விலகும். அரசு பணியில் இருப்பவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். நீண்ட காலமாக தள்ளிப்போன குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 2.அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 21, 23, 30. ஆக. 3, 5, 12, 14.பரிகாரம்: ஆண்டாளை வழிபட தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us