Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய மாத ராசி பலன்

rasi

மீனம்

பூரட்டாதி 4 ம் பாதம்
கவுரவத்தை முன்னிறுத்தி வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி யோகமான மாதமாகும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் யாவும் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.  எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள், நெருக்கடிகள் காணாமல் போகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். செய்து வரும் தொழில் ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விரயங்கள் கட்டுக்குள் வரும். மனதில் நிம்மதி உண்டாகும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கூடும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.  சிலருக்கு புதிய சொத்து சேரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 4.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 30, ஜூலை 3, 12.
பரிகாரம்: குரு பகவானை வழிபட நன்மைகள் உண்டாகும்.

உத்திரட்டாதி
மனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு ஆனி அதிர்ஷ்டமான மாதமாகும். விரய ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்தாலும் ராசிநாதனின் சுபப்பார்வை அங்கு உண்டாவதால் அவர்களால் ஏற்படும் நெருக்கடிகள் உங்களை நெருங்காமல் போகும். இதுவரை சந்தித்த போராட்டம், சங்கடங்கள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். நிம்மதியாக துாங்கிடும் அளவிற்கு எல்லாமும் மாறும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கேது உங்கள் வாழ்க்கையை வளமாக்குவர். உடல் பாதிப்பு, நெருக்கடி  இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி எதிர்ப்பு மறையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வம்பு, வழக்குகள் என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மனதில் நிம்மதி உண்டாகும். முகம் பொலிவடையும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அந்நியரால் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும். கடந்த கால நெருக்கடி விலகும். உழவுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 5.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 21, 26, 30. ஜூலை 3, 8, 12.
பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

ரேவதி
புத்திசாலித்தனம், நிதானமாக செயல்பட்டு வரும் உங்களுக்கு ஆனி மாதம் நன்மையான மாதம். ஜூன் 22 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கேது உங்கள் ஆற்றலை அதிகரிப்பார்கள். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்கள். செல்வாக்கை உயர்த்துவார்கள். இதுநாள்வரை பிறருக்காக வாழ்ந்த நீங்கள் இனி உங்களுக்காக வாழத் தொடங்குவீர்கள். உடல் பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை கிடைப்பதால் விரயம் கட்டுப்படும். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே செலவு செய்வீர்கள். சேமிப்பு உயரும். மனதில் நிம்மதி ஏற்படும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். விவசாயம், வியாபாரம், சுயதொழில் முன்னேற்றம் அடையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பதவி உயர்விற்கு தடையாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 6.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30. ஜூலை. 3, 5, 12.
பரிகாரம்: ஆண்டாள் வழிபாட்டால் நன்மைகள் பெருகும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us