‛பரிமளா அண்ட் கோ'வும் பன்னீர்சோடா கலகலப்பும்
‛பசங்க' பாண்டிராஜ் இயக்கிய ‛பரிமளா அண்ட் கோ' பட ப்ரி ரிலீஸ் ஈவன்ட் நேற்று நடந்தது. அதில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், சாண்டிமாஸ்டர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் நாங்க அடிக்கடி மிஷ்கின் ஆபீஸ் போய் 'பன்னீர்சோடா' சாப்பிடுவோம் என கோடு வேர்ல்டில் தங்கள் உற்சாக அனுபவத்தை பகிர்ந்தார் சாண்டி. அடுத்த வந்த மிஷ்கினும், பன்னீர்சோடா பார்ட்டிகள், தனது ஆபீசுக்கு யாரெல்லாம் வந்து பன்னீர்சோடா குடித்தார்கள். பன்னீர்சோடாவால் விஜய்சேதுபதி, பசங்க பாண்டிராஜ் பிரச்னை தீர்ந்தது எப்படி? சாண்டி தனது லுங்கியில் எப்படி பன்னீர்சோடா எடுத்து வருவார். விடியவிடிய அதை குடித்துவிட்டு, தன்னை ஆர்மோனியம் வாசிக்க சொல்லி, பாட்டு கேட்பது என பல விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்தார்.
கடைசியில் பேசிய ஜெயராம் என்னை பன்னீர்சோடா குடிக்க மிஷ்கின் அழைக்கவில்லை. ஆனாலும், அதை விட்டு சில காலம் ஆகிவிட்டது என்று சிரித்தார். கடைசியில் பேசிய மிஷ்கின் பன்னீர்சோடா குடிப்பதால் மனம், உடல் உற்சாகம் அடையும் என்று விளக்கம் கொடுத்தார். பன்னீர் சோடா என்றால் என்ன என்பதை அனைவரும் புரிந்துகொண்டார்கள். ஆனால் ஒருவரும் பன்னீர்சோடாவுக்கான விளக்கத்தை சொல்லவில்லை. இந்த பேச்சால் அந்த பிரஸ் மீட் களை கட்டியது.