உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

மலையாளத்தில் ‛ஆர்.டி.எக்ஸ்' படத்தை இயக்கியவர் நகாஷ் ஹிதாயத். இவர் அடுத்து துல்கர் சல்மானை வைத்து 'ஐ யம் கேம்' என்கிற படத்தை இயக்குகிறார். இதை துல்கரே தயாரிக்கவும் செய்கிறார். கயாடு லோகர் நாயகியாக நடிக்க, ஆண்டனி வர்கீஸ், கதிர், மிஷ்கின், சாண்டி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதியன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வருகிறது என புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !