உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோல்கட்டாவில் மெட்ரோ ரயிலில் பயணித்த விஷால்

கோல்கட்டாவில் மெட்ரோ ரயிலில் பயணித்த விஷால்

சினிமா நடிகர்கள் பலரும் அவர்களது கார்களில் பயணிப்பதைத்தான் வழக்கமாக வைத்திருப்பார்கள். நீண்ட தூரப் பயணம் என்றால் ரயில் அல்லது விமானங்களில் மட்டுமே இருக்கும். உள்ளூரில் பயணிக்க மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் என்றெல்லாம் செல்லவே மாட்டார்கள்.

நடிகர் ஆர்யா மட்டும் விமான நிலையத்திற்குச் செல்ல முன்பெல்லாம் மெட்ரோ ரயிலில் பயணித்ததை வீடியோவாகப் போட்டுள்ளார். இப்போது எப்படி போகிறார் என்று தெரியவில்லை.

நடிகர் விஷால் கோல்கட்டாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சுந்தர் சி இயக்கும் படத்திற்காக விஷால் கோல்கட்டா சென்றுள்ளார். அங்கு அவர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார். அங்கு கூட அவரை அடையாளம் கண்டு கொண்டு சிலர் செல்பி எடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.

கோல்கட்டாவில் சென்றதைப் போல சென்னையிலும் இப்படி செல்வாரா என அடுத்த முறை சந்திக்கும் போது கேட்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !