உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி

அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி


தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சித்தாரா என்டர்டெயின்மென்ட். தனுஷ் நடித்த 'வாத்தி', துல்கல் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களை அடுத்து தமிழில் சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.

இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் சூர்யாவின் தம்பி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை கல்யாண் சங்கர் இயக்க, 'தி கோட்' படத்தில் நடித்த மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் ஒரு ஜாலியான என்டர்டெயின்மென்ட் படமாகத் தயாராக உள்ளதாம்.

இப்படத்தை இயக்கும் கல்யாண் சங்கர் இதற்கு முன்பு, 2023ல் வெளிவந்த 'மேட்', 2025ல் வெளிவந்த 'மேட் ஸ்கொயர்' ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

தெலுங்கு நிறுவனங்கள் அடுத்தடுத்து தமிழில் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள். தமிழ்த் தயாரிப்பாளர்களை விட்டு தெலுங்கு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பது இங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !