உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருண் விஜய், மிஷ்கின் புதிய கூட்டணி

அருண் விஜய், மிஷ்கின் புதிய கூட்டணி

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பிசாசு உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் உருவான டிரெயின், பிசாசு 2 என இரண்டு படங்களும் படப்பிடிப்பு நிறைவு பெற்று ரிலீஸாவதில் சில பிரச்னைகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிஷ்கினும் நடிப்பு பக்கம் திரும்பி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் இயக்குனராக திரும்புகிறார் மிஷ்கின். அடுத்து அவர் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அருண் விஜய், மிஷ்கின் கூட்டணி முதல்முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !