தூக்கம் வருவதற்காக ஹாரர் படங்களை பார்ப்பேன் ; பவன் கல்யாண் அடடே தகவல்
ADDED : 7 hours ago
பொதுவாக இரவில் தூக்கம் வராதவர்கள் மெல்லிசை கேட்பார்கள் அல்லது நிசப்தத்தை விரும்புவார்கள். ஆனால் இதற்கு அப்படியே முற்றிலும் மாறாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் தற்போதைய ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தனக்கு தூக்கம் வராத சமயங்களில் பேய் மற்றும் திகில் படங்களை பார்ப்பேன். அதை அடுத்து அப்படியே தூக்கம் வந்துவிடும் என ஒரு ஆச்சரிய தகவலை சமீபத்தில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “எனக்கு திகில் படங்கள் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவை எனது கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுகின்றன. அந்த படங்கள் வேறு எதையும் யோசிக்க விடுவதில்லை. என் மூளையை அப்படியே கட்டி போட்டு விடுகின்றன. இல்லை எனில் என் மனம் கண்டபடி அலைபாய்ந்து கொண்டே இருக்கும் ஹாரர் படங்களை பார்க்கும்போது என் மனம் அமைதியாகிவிடும்” என்று கூறியுள்ளார்.