'லாபத்தில் பங்கு' சம்பளத்தில் விக்ரம் !!, மற்றவர்களும் பின்பற்றுவார்களா?
தமிழ்த் திரையுலகத்தில் நடிகர்கள், நடிகைகள் 'லாபத்தில் பங்கு' என்ற விதத்தில்தான் சம்பளம் வாங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கெனவே சொல்லியிருந்தது. அதை வலியுறுத்தி கடந்த மாதம் ஒரு நாள் வேலை நிறுத்தத்தைக் கூட தயாரிப்பாளர்கள் செய்தார்கள்.
இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்து தயாரிக்க உள்ள படத்தில் நடிகர் விக்ரம் 'லாபத்தில் பங்கு' என்ற விதத்தில் தான் சம்பளம் பேசியிருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அவருடைய சம்பளமாக 18 கோடியும், பின்னர் வியாபாரத்தின் அடிப்படையில் மற்றும் ஓடிடி உரிமை அடிப்படையில் மீதி சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளவும் சம்மதித்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
அப்படி நடந்தால் இந்த முறையில் தமிழில் இதை ஆரம்பித்து வைக்கும் நடிகராக விக்ரம் இருப்பார். ஏற்கெனவே ஹிந்தி, தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் இப்படித்தான் சம்பளம் வாங்குகிறார்கள். விக்ரம் செய்தது போல தமிழில் மற்ற நடிகர்களும் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.