உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷால் வழங்கிய விலைமதிப்பற்ற பரிசு : முதல்வர் விஜய் நெகிழ்ச்சி

விஷால் வழங்கிய விலைமதிப்பற்ற பரிசு : முதல்வர் விஜய் நெகிழ்ச்சி

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால், தனது பாணியில் அவருக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஏழை மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி செய்து வருகிறார். தான் நடத்தும் நிகழ்ச்சி மற்றும் மற்றவர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு வழங்கும் பொன்னாடை, பூங்கொத்து உள்ளிட்ட பரிசுகளை தவிர்த்து, அதற்கு மாறாக சம்மந்தப்பட்டவர்களின் பெயரில் ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஜூன் 15ம் தேதி முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால், அவருக்கு வழங்கப்படும் பரிசாக, அவரது பெயரில் மூன்று ஏழை மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஷாலின் இந்த விலைமதிப்பெற்ற பரிசை பெற்றுக்கொண்ட முதல்வர் விஜய், அவருக்கு நெகிழ்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் நன்றி தெரிவித்து, ”உங்களின் இத்தகைய சேவை முயற்சி தொடரட்டும்” என்று வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !