உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமந்தா ஒரு அற்புதமான நடிகை : கணவர் புகழாரம்

சமந்தா ஒரு அற்புதமான நடிகை : கணவர் புகழாரம்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் 'மா இண்டி பங்காரம்'. இந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார் சமந்தா.

திருமணத்திற்கு பிறகு சமந்தாவும், அவரது கணவர், இயக்குனர் ராஜ் நிடிமொருவும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக அமைந்துள்ளது. மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சமந்தா கதையின் நாயகியாக நடிக்கும் படம் என்பதால் இது அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து உள்ளார் சமந்தா.

இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தாவின் கணவரான ராஜ் நிடிமொருவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்த படத்தில் பணியாற்றும்போது சமந்தாவை தனது மனைவியாக பார்க்காமல், ஒரு நடிகையாகவே பார்த்தேன். அவரது திறமையை கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டதோடு அவர் எவ்வளவு அற்புதமான நடிகை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !