நானி தயாரிப்பில் துல்கர் சல்மான்
ADDED : 3 hours ago
நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் ஒரு தயாரிப்பாளர் ஆக தனது வால் போஸ்டர் சினிமா நிறுவனத்தின் மூலமாகவே ஹிட் படத்தின் மூன்று பாகங்கள் மற்றும் கோர்ட் உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்தவர். தற்போது மீண்டும் கோர்ட் படத்தின் இயக்குனர் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் நானி ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நானி எப்படி தெலுங்கில் முன்னணி நடிகரோ அதேபோல் மலையாளத்தில் துல்கர் சல்மான் முன்னனி நடிகர். ஆனாலும், இருவர் கிடையில் எந்தவொரு ஈகோவும் இன்றி ஒரு நல்ல படைப்பிற்காக இரண்டு நடிகர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.