உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் பொம்மைக்கு வாழ்த்து: மகளை வாழ்த்திய குஷ்பு

என் பொம்மைக்கு வாழ்த்து: மகளை வாழ்த்திய குஷ்பு


அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவான 'டபுள் ஆக்குபன்சி' பட நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. படத்தை குஷ்பு தயாரித்து இருந்தாலும் அவர் சார்பில் பட வேலைகளை, கிரியேட்டிவ் வொர்க் கவனித்தது அவர் இளைய மகள் அவந்திகா. விழாவில் குஷ்பு பேசுகையில், ''நான் இந்த விழாவுக்கு தாமதம் ஆக வந்துள்ளேன். சில நாட்களாக சரியாக தூங்கவில்லை. வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என சும்மாவா சொன்னார்கள்.

என் மூத்த மகள் திருமண வேலைகளில் தீவரமாக இருக்கிறேன். என் கணவர் சுந்தர் சி 'புருஷன்' பட வேலை, திருமண வேலைகளில் சுற்றி வருகிறார். அவராலும் இந்த விழாவுக்கு வர முடியவில்லை. என் இளைய மகள் இந்த பட வேலைகளை சரியாக செய்தார். அவந்திகாவை அனி என செல்லமாக அழைப்பார்கள். நான் பொம்மை என்பேன். என் பொம்மைக்கு வாழ்த்துகள்.

இந்த பட வேலைகளில் சிக்கல், பிரச்னை இருந்தது. அதை மீறி ஜெயித்தார். என் மூத்த மகள் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து நாலு படங்களில் நடிக்கப்போகிறார். முன்பு ஒரு ஹீரோயின் காதல், திருமணம் என்பதை சொல்ல பதறுவார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு சின்ன படம் இந்தளவு வந்தது மகிழ்ச்சி. நாம் தயாரிக்கும் படம் மக்களை மகிழ்விக்கணும், அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு தகுந்ததாக இருக்கணும் என்று சுந்தர் சி சொல்வார். அதை நாங்கள் தொடர்வோம்'' எனப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !