உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சூர்யா 47' படத்தில் மோகன்லால் இல்லை உறுதிசெய்த ஜித்து மாதவன்!

'சூர்யா 47' படத்தில் மோகன்லால் இல்லை உறுதிசெய்த ஜித்து மாதவன்!


'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யா புதிதாக துவங்கியுள்ள ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லின் நடிக்கின்றனர்.

தற்போது ஒரு பேட்டியில் ஜித்து மாதவனிடம் சூர்யா 47 படம் குறித்து அப்டேட் கேட்டனர். இதற்கு ஜித்து மாதவன் அளித்த பதில் படி, சூர்யா 47 படம் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பும் நிறைவு பெறவுள்ளது. அதனால் சரியான நேரத்தில் அப்டேட் வரும். அதேபோல் மோகன்லால் சார் இந்த படத்தில் நடிக்கவில்லை. இதுவரை நாங்கள் ஒரு போஸ்டரை கூட வெளியிடவில்லை. விரைவில் சூர்யா 47 பட அப்டேட் வரும். என ஜித்து மாதவன் உறுதி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !