உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தர்மன்' படப்பிடிப்பு தொடங்கியது: டிசம்பரில் படம் ரிலீஸ்?

'தர்மன்' படப்பிடிப்பு தொடங்கியது: டிசம்பரில் படம் ரிலீஸ்?


கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன் நடிக்கும் 'தர்மன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பாடல் காட்சியுடன் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி கலர்புல் கெட்அப்பில் ஆடி வருகிறார். அடுத்து ரஜினி பங்கேற்கும் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. அதை தொடர்ந்து மற்ற காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும். குறிப்பாக ரஜினி பிறந்தநாளுக்கு (டிசம்பர் 12) வரலாம் என தகவல்.

அடுத்து நெல்சன் இயக்க, கமலுடன் தான் நடிக்கும் படத்துக்கு ரஜினி செல்ல உள்ளார். அடுத்த ஆண்டு அந்த படம் வெளியாக உள்ளது. எனக்கு 2 படங்கள் பண்ணுகிறார் ரஜினிகாந்த் என நேற்றைய விழாழவில் கமல்ஹாசன் பேசினார். தர்மன் ஒரு படம், மற்றொன்று எது என்ற கேள்வி எழுந்துள்ளது. நெல்சன் படத்தை இன்பன் உதயநிதி தயாரித்தாலும், கமலின் ராஜ்கமலும் ஒரு பார்ட்னர். அதனால், அந்த லாபத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்கிறார்கள் கோலிவுட்டில்.

இதற்கிடையில் வரிசையாக ரஜினிகாந்த் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார். அவர் வேறு ஜானரில் நடிக்க வேண்டும். பெண்கள்,குழந்தைகளை கவரும் வகையில் சந்திரமுகி மாதிரியான படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !