உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குஷ்பு மகள் திருமண விழாவில் திரைப்பிரபலங்கள்

குஷ்பு மகள் திருமண விழாவில் திரைப்பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் 90களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பு. அவரும் இயக்குனர் சுந்தர் சியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள்.

அவந்திகா தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். கடந்த வாரம் ஆரம்பமான 'அட்டாக்கர்' தமிழில் அவரது முதல் படம். அவருக்கும் ஷ்ரவன் சீனிவாசன் என்பவருக்கும் நேற்று கோவாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமண நிகழ்வில் முன்னணி தமிழ் நடிகர்கள் யாரும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதேசமயம் சீனியர் தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ் ஆகியோர் அவரவர் மனைவியருடன் கலந்து கொண்டுள்ளனர்.

ஹிந்தி நடிகர்கள் அனில் கபூர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தமிழ் சினிமாவிலிருந்து நடிகை த்ரிஷா மட்டுமே கலந்து கொண்டுள்ளார். அதேப்போல் 80களின் நடிகைகளில் லிஸி, சரிதா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

மிகவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் மட்டுமே இந்தத் திருமணம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !